பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு 173

ஒரு ஆஹா காரம் கூட்டத்தை ஊடுருவியது. சமயம் ஏற்படுத்திக் கொண்டு சிவராமன் என்னைத் தனியா மூலைக்கு இழுத்துச் சென்றான்.

‘இது யார் செலவு ? நான் தோளைத் தூக்கு கிறேன். எனக்கென்ன தெரியும் ? .

யார் செலவாயிருந்தாலும் சரி. எனக்கு நாளைக்கு நீ தனியா அல்வா நெய்க்கடலை கவனிச்சுடனும் ?” எனக்குச் சிரிப்பு வருகிறது.

{} {}

மொட்டை மாடியில் மேஜை நாற்காலியெல்லாம் ஏற்றியாகி விட்டது.

வழக்கப்ரகாரம் அக்கெளண்டண்ட் இல்லை. மதறாஸ் போயிருக்கிறார். அதென்ன் அவருக்கு மட்டில் அப்படி ஒரு மதறாஸ் ஜோலியோ ?

மாடி மூலையில் சமையல் பண்டங்கள் எல்லாம் ஒரு இரு மேஜைகளின் மேல் ஒழுங்காக எவர் ஸில்வர் பாத் ரங்கள், மூடிகள், தனித்தனி கரண்டிகள், சுத்தமாகி, வரிசையாக வைக்கப் பட்டிருக்கின்றன.

வாழையிலைக் கட்டு. பாலாஜி கபே ப்ரொப்ரைட்டர் ராயரே ப்ரஸன்னமாக யிருக்கிறார், இரண்டு உதவிகளுடன். இரண்டு கணப்புக் கும்மட்டிகள் சுறுசுறுப்பான வேலையிலிருக்கின்றன.

தக்காளி சூப்:- ரொட்டித துண்டங்கள் மொறு மொறு வென மிதக்கின்றன. படுருசி. சிவராமன் இதை அவன் ஆயுசில் பார்த்திருக்க மாட்டான். கண்டிப்பாக நான் பார்த்ததில்லே. ஆனால் ஒரு கோப்பைக்கு மேல் கிடையாது. பசியைத் தூண்டவாம்.

(எங்கள் பசியைத் தூண்டிவேறே பார்க்கணுமாக்கும்.) பூரி, தால் (அதில் பச்சைப் பட்டாணி, பொடிப் பொடியாக மாங்காய்த் துண்டுகள்)