பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 லா. ச. ரா.

டே, பாலாஜிராவ், குடி கெடுக்கவே நேரில் வந்தையா? டேய், உன்னை ஒரு நாள் மடக்கி வெச்சு உதைக்காட்டா என் பேர் அம்பியில்லை. ஆமாம், என் டேர் என்ன?

முத்தையாவும் சிவராமனும் அவசரமாத் தனித் தனியாக ஜாங்கிரியையும் கட்லெட்டையும் பார்சல் தட்டுகின்றனர். முத்தையா வீட்டில் குஞ்சான் குளு, வான்கள் காத்திருக்கின்றன. கட்டைப் பிரம்மசாரி சிவராமன் ஏன்? ஆனால் அதுவும் சரிதான். காசைக் கொடுத்துவிட்டு பாலாஜி ராவுக்கு வாபஸ் ஆவானேன்: ராயருக்கு ஒண்னுக்கு மேலே ஒண்ணு நாமே தrணை கொடுத்து, லாபமும் பண்ணி வெக்கனுமா?

அம்பி, நீயும் எடுத்துட்டுப் போறியா? நானா No, பயமாயிருக்கிறது. காட்டிக் கொடுக்கப் பொட்டலம் வேறு கொண்டு போகணுமா? பாலா தூக்கி விட்டெறிவாள். இப்பவே நேரம் ரொம்ப ஆகி விட்டது. பயமாயிருக்கிறது.

அந்தச் சினம் கக்கும் விழிகள். இரு பக்கங்களிலும் அற்புதமாய் அச்சுப் பிசகாது கோடுகளாய் வளைந்த புருவங்களடியில், முழுக் கறுப்பு அல்ல. லேசாக சாம்பல் பூத்த விழிகள். நீறு கலந்து கக்கும் நெருப்பில் முகமும் சிவப்பேறப் போவதை நினைக்கையிலேயே பிடரி குலுகுலுக்கிறது. அவளைக் கண்டால் எனக்கு எப்பவுமே லேசாக அஸ்தியில் சில் தான். இங்கே வந்திருக்கப் படாது, வந்திருக்கப்படாது என் நரம்புகளில் அபாயத் தந்தி அடிக்கிறது. இப்ப இங்கேயே இவரை விட்டு விட்டுப் போய் விட்டால் என்ன? அவர் பாடு, அவர் பெண் பாடு- அம்பி, சீ. நீ மனுஷனா? அம்பி நாயே, உண்மையில் இந்த மனுஷ னுடைய நிலைக்கு நீதான் காரணம். பார்ட்டியே உனக்குத்தானே, உன்னால் தானே!