பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 Qfr. g gT.

ஆனால் எப்பவும் “நிஜம்தான் வெல்லும்.’ வெல்லட்டுமே! யார் தடுக்கிறார்கள்? இன்று சாகழிக்கு அழைக்கும் சந்திரனாய்த் தானிருக்கிறான். காமுப் பாட்டி சொன்ன கதை ஞாபகம் வருகிறது. யாரே கொலையுண்டவன், சாகுமுன் சந்திரனை சாகதிவைத்து விட்டுப் போனானாம்.

‘அம்பி, உன் மானேஜரை இந்த நிலையில் பார்க்க உனக்கு வெறுப்பாயிருக்குமே! எனக்கு நாளைக்காலை உன் முகத்தில் விழிக்க வெட்கமாயிருக்கும்”

சந்திரனே சாr. வெண்ணெய் உருகினாற் போல் வெண்ணில மேகங் கள் பாறை பாறையாக உடைந்து கிடக்கின்றன. நிகழ்த்ரங்கள் கல்கண்டுக் கட்டிகளாய் மின்னுகின்றன. அற்புதமான மோனம் உலகைத் தன் வாயில் கவ்விக் கொண்டிருக்கிறது மோனத்துக்கு உரு உண்டோ? உண்டோ இல்லையோ, இச்சமயம் என் நினைப்பில் அதற்கு வாய் இருக்கிறது. -

சந்திரனே சாr. ‘அம்பி, ரொம்பத்தலை சுத்தறது. You must see me home sonehow to night’

‘ஸார், இதோ நாம் வீட்டுக்கே வந்தாச்சு” சைகையில் கையை உயரத் துளக்குகிறார். ஆம் அது என்ன?

நெருப்புப் பிழம்பு என, வீட்டிலிருந்து தம்பூரின் உருகோசை புறப்பட்டு எங்கள் மேல் இறங்குகிறது. இந்த வீட்டுக்கு வந்த பின் முதன் முதலாக இன்றுதான் கேட்கிறேன். மானேஜர் முகத்தில்-திகில்?

வாசற் கதவை மெல்ல அழுத்துகிறேன். எங்கள் நல்ல காலம் தாளிடப்படவில்லை. மறந்தாளோ ? மறந்தால் தவறு அல்ல ? இந்த நேரத்தில் ஏன் இப்படித் திறந்தது