பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 @fr

புதன் கிழமையாயிருக்கு. டிமிக்கிக் கொடுக்க றதில்லே. இன்னிக்குத் தேச்சுண்டே ஆகனும், மிளகு ரஸம் சாப்பிட்டே ஆகனும், பருப்புத் துகையல்லே மொத்தை அடிச்சுட்டு எழுந்திருக்கிறதில்லே.”

சரி பாட்டி”. “நான் உனக்குப் பாட்டியில்லே. உன் அப்பனையும் பெக்கல்லே. உன் அம்மையையும் பெக்கல்லே.”

  • சரி பாட்டி’ எனக்குக் கொஞ்சம் வியப்பாயிருந்தது. அவளுக்கு இன்னிக்கு மூடு சரியாயில்லையா? “ஆமாம் பூசாரி போட்டுத் தப்பிச்சுக்க வேண்டியது தான்.

“எண்ணெயைக் காய்ச்சிண்டு வரேன். கோவனத்தைக் கட்டிண்டு தயாராயிரு” என்று சமையலுள்ளே போய் விட்டாள்.

அப்படியா சமாச்சாரம்? இப்போ புரிஞ்சது. இப்பவும் புரியல்லே. கடா மாதிரி எனக்குப் பதினஞ்சு வயசாறது முன்னே பின்னே பழக்கமுமில்லை. இன்னிக்கு இதென்ன புது ஸ்டண்ட்? மாட்டேன்னா ரகளை நடக்கும். அதுவும் தெரியும் அவள் ஒண்ணை நெனச் சுண்டாட்டா பிறகு நினைப்புக்கும் செல்லாக் காசுக்கும் இடைக்கோடு கிடையாது.

ஒடி விட்டேன். எவ்வளவு தூரம், எந்த திக்கில் என்று எனக்கு அப்போது தெரியாது.

பகல் பூரா, மாலை பூரா. பசி. No, அதைப் பற்றி நினைத்தாலே கூடப் பசிக்கும். பசியைப் பற்றி எனக்குத் தெரியும்.

யாரோ தோளைப் பிடித்து உலுக்குகிறார்கள். மன மிலாது விழிப்பு. பொல பொலவெனப் பொழுது விடிவு.

‘என்னடா கண்ணு? எண்ணெய் தேய்ச்சுக்காமலே வந்துட்டியே; கண் பொங்கறதே!”