பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு } &#

திறந்தபடி ? எவனேனும் நுழைந்து அடித்துப் போட்ட” லும் கொலை செய்தாலும் கேள்வியில்லை. அடிமேல் அடி வைத்து இரண்டு திருடர்கள், நாங்கள் தான், உள்ளே செல்கிறோம். மானேஜர் வாஷ் பேஸினில் வாயை அலம்பிக் கொப்புளித்து முகம் துடைத்துக் கொள்கிறார். முகம் கடிதாசாய் வெளுத்திருக்கிறது.

வெளியே கொ ட் டு ம் பனியிலிருந்து வீட்டின் அடைப்புள் உஷ்ண நிலை மாறியது இதவாயிருந்தாலும் லேசாய் நெற்றி கசகசக்கிறது. நாதக்கனல் ?

பூஜையறை வாசலில் இரு கள்ளர்கள் நிற்கிறோம்.

தம்பூரைத் தழுவிய வண்ணம்

பாலா

ஸ்ஹிக்க முடியாத ஸெளந்தர்யம்

தரிசனம் பாலா

நீலம் உடுத்தியிருக்கிறாள்

அகிற்புகையில் உருவான சித்திரமாய் மிளிர்கிறாள்

குத்து விளக்கொளியில்

தானே ஒரு தழல் கொழுந்து

வெறி மீட்டலில்

என்ன கொந்தளிப்பு இது ?

படத்தில் முகம் மாறுகிறது

கண்ணிரின் பள பளப்பில்

கன்னங்கள் ஒளி வீசுகின்றன

படத்தினின்று வெளிவந்து

பெண்ணை அணைத்துக்

கொள்வாயோ ! - ஒசையின் கடையலில் ‘நான் ஒரு நாத அதிர்வு” - ஒசையின் கடையலில்

க்ருண்டு தி ர ளும் நஞ்சின் நீல இருளில் அ ங் கே நெஞ்சப் புயலுக்கு சொற்கள் எ ன் னி ட ம் நிகழ் கின்றன. பயமாயிருக்கு.