பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

183 லா, ச. ரா.

‘நான் ஒரு நாத அதிர்வு - அடித்தாலும் அலற வாயில் லாத பாம்பு சாகாவரத் தில் பிடாரனின் தோலு ரிப்பில் துவண்டு நெளி

கிறது. “நான் ஒரு நாத அதிர்வு’ - வி ட் ட இடத்தைத் தொட்டுக் கொண்டு உ யி ரி ன் ஜ் ன் ம

வாசனையில் குளித்து இதய அஸ்தமனத்தின் தொடுவிளிம்பிலிருந்து வார்த்தைகள் புறப்படு கின்றன

நான் ஒரு நாத அதிர்வு’

இடி வலியின் அலையில்

கரையில் தூக்கி எறியப்பட்டேன்

அந்தரத்தில் தொங்கித்

தவித்துத் திணறித் திக்கற்றுத்

தெப்பலாடித் தத்தளிக்கிறேன்’

தென்னந்தோப்பில் கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்து கொண்டிருக்கிறேன். முத்தையா கீழே உட்கார்ந்து, தேங்காய் மட்டை நாரில் கயிறு திரித்துக் கொண்டிருக் கிறான்

பிற்பகல் வேளைக்கு முத்தையாவின் தென்னஞ் சோலைக்கு மிஞ்சியில்லை. இந்த மண்ணில் என்றோ ஏதோ ஒரு மஹானின் அஸ்தியே கலந்திருக்க வேண்டும். அப்படி ஒரு இதமான அமைதி.

புண்ணுக்குத் தைலம் தடவினாற் போல அமைதி உள் இறங்கி பரவுவதை சதை பூர்வமாகவே அறியலாம். ஏற்றக் காலைச் சுற்றி சோலைக்குள் ஒரு தனிச் சோலை. தண்ணீர் பாய்ச்சுகையில் எதுவும் சேதமாகாமல்