பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆங்காங்கே வெய்யில் படும் இடமாகப் பார்த்து, பூவும் காயும் படர விட்டிருக்கும் பாங்கையும் கம்பி வேலிமீது புஷ்பங்கள். தலையாட்டிச் சிரிக்கும் வெட்கத்தையும் நாள் பூரா அலுக்காமல் அனுபவித்துக் கொண்டிருக் கலாம். வாழை நாலைந்து ஒரு ஒரத்தில் செழித்து வருகின்றன. ஆள் படுக்கலாமளவுக்கு இலைகள் இரண் டினிடையே ஒரு தார் திருட்டுத்தனமாய் விட்டிருக்கிறது. திருடன் கண் படாமலிருக்கணும்.

இங்கு அபஸ்வரத்துக்கே வழியில்லை. பூமியின் ஏற்றத் தாழ்வுப்படி ஒய்ந்தும் நெருங்கியும் கேட்கும் ரயிலின் திடும்திடும், சாலையில் பஸ் பூம்பூம், எருமை மாட்டின் உறுமலைக் கூடக் காற்றலைகள் ஏதோ முறையில் வடிகட்டி ஸ்வரமாக்கி இடத்தின் ஸ்ருதியோடு இழைத்து விடும் ஜாதுவில் எல்லாமே கிளுகிளு குளுகுளு. எண்ணங்கள் ஒருமுகமாகி அருவி பாய்கின்றன. எண்ணங்கள் சுருக்க ஸ்ருதி சேர்வதே பெரும் பாக்யம் தான். லயிப்புக்கு இது போன்ற இடமும் ஏவலும் அமைந்தால் கேட்கவும் வேண்டுமா ? கட்டிலின் மேல் சாய்கிறேன். கண்சொக்கறது ஆனந்த மூர்ச்சையா தென்றலின் வருடலில் அரைத் தூக்கமா தெரியவில்லை.

ஜீவநதியின் ஒட்டத்தில் கலந்தபின் நானே, என் வாழ்வே, வாழ்வின் நோக்கமே ஒரு எண்ணமாய்ப் பாய் கிறேன்.

மானேஜர் வீட்டில், பூஜை அறையில் கங்கையை ஏற்கச் சடை விரித்து சிவன் காத்திருக்கும் படம் எண்ணத்தில் எழுகிறது.

மானேஜர் அறை அலமாரியில் பலதுறைப்பட்ட புத்தகங்கள் இருக்கின்றன. ஆங்கிலமோ, தமிழோ, இடறி விழுந்து எழுந்து சமாளித்து அப்படியும் இப்படியுமாக அ ைஏ யே குறையோ, நாளடைவில் முறையாகவே முழுமையாகவே புரிந்து கொள்ளப் பழக்கிக் கொண்டு