பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 fr . σπ.

விட்டேன். சமைத்துப்பார், கரும்புப் பயிர், ஷாஜஹானின் துயரங்கள், மஹாபாரதம், பெரிய எழுத்து விக்ரமாதித் தன் கதை, பூகோளம், அறிவியல், இலக்கியம் ஒன்று பாக்கியில்லை.

ஸார்: “இந்த பாங்கிங் தொழில் முறையிருக்கே, உத் யோகம்-இது நாய் வாய் வைத்த மாதிரி உலகின். இயக்கத் துறைகள் அத்தனையிலும் அறிவு கொஞ்சம் கொஞ்ச மேலும் அவசியம். எல்லாவற்றையும் பூராதெரிந்து கொள்வது சாத்யமில்லை. பிறன் நம்மை ஏமாற்றாமல், என்னை நான் காப்பாற்றிக் கொள்ளும் அளவுக்கேனும். உஷாராயிருக்க வேண்டுமல்லவா?”

தாஜ்மஹால், நயாகரா, Fujiyama, கைலாச மலை, மானஸ்ரோவர், கங்கோத்ரி, அமர்நாத், நான் பாராத ஊர், இடமெல்லாம் எனக்குப் பசித்தவனின் கனவு தானே! மானேஜர் அலமாரியில் மேய்ந்து விட்டு, முத்தையாவின் தென்னந் தோப்பில், கயிற்றுக் கட்டிலில் சொகுசாய்ப் படுத்த வண்ணம் அசை போடுகிறேன். இந்த சமயத்தில், இடம், காலம் தாண் டி எண்ணத்தின் மார்க்கத்தில் போகாத இடமே இல்லை.

எங்கோ பி ற ந் து, எங்கெல்லாமோ பாய்ந்து, ஆங்காங்கே ஒன்றோடு இன்னொன்று கலந்து, ஒரொரு பெயர் மாறி, எவ்வளவு பெரிய நீண்ட யாத்ரை! யாரைத் தேடிக் கொண்டு சிவனைத் தேடிக் கொண்டா? இல்லை, தன்னைத் தேடிக் கொண்டு, பாலா மாதிரி. கங்கா பாலா. தம்பூரின் ஸ்ருதியில் தன்னைத் தேடி அலைய தான் கண்ட பாலா. தபஸ்வினி.

கங்கையோ, காவிரியோ, வாய்க்காலோ, நீரில் மூழ்கி எழுகையில், ஆடை ஈரம் அங்கங்களை விளம்புகையில்என்ன தூய ஸ்னானமானாலும்- பார்ப்பவன் மனிதன் தானே! கண்ணுக்குச் சோ ர ம் ஒப்புக் கொள். எண்ணத்தில் சோரம் ஒப்புக் கொள். ஆனால் நெருப்பில்