பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு 189

போவாது. இந்த மண்ணும் நல்லமண். இந்த ஊரும் நல்ல ஊர். நினைக்காதே கிராமத்துக்குக். கிராமம் பட்டனத்துக்குப் பட்டணம் ஒரொருகன்னையும் இந்த கையாலேயே நட்டு கண்ணுலே வெச்சு வளர்த்தது. மன சோடு கொடுப்பேனா ? உனக்குக் கொடுத்தால், எனக்கு என்னிக்கானும் நிழல்தரமாட்டியா ? இப்போ இருக்கற தைக் கொடு. மிச்சத்தை வர வருசம் கொடேன். இல்லே பத்தரத்தை வெச்சுக் கடனாத்தான் கொடேன், வட்டிக் குப் போகத்தெ அனுபவிச்சிக்கிட்டு நல்ல காலம் வந்தால் மீட்டுக்கறேன். எனக்கு அசலை, மாசூலிலிருந்தே மூனாக் கிக் கொடுக்கறேன். ஆனால் எனக்கு இப்போதைக்கு விடியும்னு தோணல்லே. சக்ரம் ரிவெர்ஸ்லே சுத்துது, நல்ல காலம் மறந்துபோய் கூடவே ஒடியும் பூட்டுது. இப்போ இளுத்துப் பிடிக்குது. என் கதை இருக்கவே இருக்குது, சரி, என்ன சொல்றே ?”

க்

‘எனக்குத் தனிச் செயல் இ ல் லே ன் னு உனக்கே தெரியும்’ என்று முனகினேன். எனக்கு அவனிடம் பேசக் குரல் எழும்ப மாட்டேன்கறது. திடீரென நினைப்பு வேகத்தில் தேள் .ெ கா ட் டி ய இடம் சுறில் என்றது. வெறும் அஸ்தியிலிருந்து உருப்பிடித்து உயிர் கொடுத்த வனாச்சே செந்தாமரை தாய்க்குத்தாயாக உனக்கு ஊட்டினாளேடா பாவி !

‘ஐயா கிட்ட விசயத்தை சொல்லேன். ஐயா கருணை உள்ளம் படைச்சவர் நிலைமை புரிஞ்சுக்குவார் மாட் டேன்ன மாட்டார்.”

உன் கஷ்டத்திலே சுலபமாச் சொல்லி விடுகிறாய். ஸ்ாரிடம் வார்த்தை கொடுக்க வேண்டாமா ? என்னுடை யது என்று யாரிடம் உரிமை பேசச் சொல்கிறாய்? பயப் படுவதே ஒரு பிழைப்பு. பழகமாட்டேன்கறதே. சமயம் பார்த்துக் கேட்கனும், ஆனால் எது சமயம்? நாமாக எடுத்துக் கொள்வதா? ஏற்படுத்திக் கொள்வதா? தானா நேர்வதா? ஆனால் நாளுக்கு நாள் முத்தையா முகம்