பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 a)fr. fr.

தலையைப் பலமா ஆட்டுகிறேன். எனக்கென்ன தெரியும்?

மானேஜர் ஒரக்கண்ணால் ஒரு தினுசாய்ப் பார்த்துக் கொண்டே, ‘முத்தையாவுக்கு நீ மாட்டேன்னு சொல்ல முடியாதல்லவா? முத்தையா pool fetiow. நான் Dr. கிருஷ்ண ஸ்வாமியை விசாரிக்கிறேன்”.

முத்தையா, ஜயிச்சுட்டே ஆனால் என்ன ஜயிப்பு. உாக்டர் தீர்ப்பு என்னவாயிருக்குமோ? நினைக்கவே பயமாயிருக்கிறது. பூஜையறையில் நான் தனியா வேண்டிக் கொள்ளலாமா? யாரை வேண்டிக் கொள் வேன்? மாமி, இப்போ நீங்கள் தான் எனக்குத் தஞ்சம். ‘என்னடா அம்பி, நீ சுத்த அழுமூஞ்சி ஆயிட்டே! வெட்கமாயில்லே தொட்டதற்கெல்லாம் அழுகை. என்ன கண்ணிலே தளும்பல்?’

“என்னை மன்னிச்சுக்கோங்கோ ஸ்ார்’ என் அறைக்கு ஒடிப் போய், கதவை மூடிக் கொண்டு மேஜை மேல் முகம் கவிழ்கிறேன். கரை புரள்கிறது.

உங்களுக்குப் புரியல்லே ஸ்ரர். கருணையினாலேயே கொல்லும் இந்த வீட்டுக்கு வந்திருக்கப்படாது.

காமுப் பாட்டி ஏதோ கதை சொல்லுவாள். நாதி யத்த ஒடுகாலிக் கட்டையிலே போவானுக்கு இடம் கொடுத்ததே வலையனை மலர் மஞ்சத்தில் படுக்க வெச்ச மாதிரி. அவனுக்கு இங்கே எங்கே தூக்கம் வரும்? மீன் கூடையிலே முகத்தைப் புதைச்சுண்டாத்தான் தூக்கம் வரும்.”

காமுப் பாட்டி, நீ சொன்னது மெய்தான். அந்தி வேளை.

தென்னந் தோப்பில் தன்னந்தனியாகக் கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்திருக்கிறேன். ஏன் ? தெரியாது.