பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 SOrr. SF, Drrr.

உன் அலகதியம் எனக்குக் கோபம் வருகிறது. ஏய், (இல்லை ஏடி யா?) இந்தத் தென்னந்தோப்போடு சேர்ந்து, நீயும், உன் புற்றோடு இப்போ நீ என் சொத் துத்தான்.

நீ என் சொத்து ஆனால் நீ என்னை விட்டு வைத்தி ருப்பதால் நான் உன் சொத்து உன் சொந்தம் கொண் டாட உனக்கு ஒரு வழி தான் தெரியும் . பட் ஒரு போடு. பிறகு என்ன செய்வாய் பாவம்! என்னை விழுங்கவும் முடியாது. என்னால் எனக்குப் பலனில்லை. என்னால் உனக்குப் பலனில்லை. அர்த்தமற்ற கொல்லல். உன்னை நான் என்னால் நீ. ஆம், இருப்பவர்கள் உன்னை விட்டு வைத்திருப்பார்களா ? வாழ்க்கை என்பதே இதுதானா? ஏதோ ஆவல் தூண்ட, எழுந்து ஒடிப்போய்ப் பார்க்கி றேன். உன்னைக் காணோம். அடையாளம் கூட இல்லை. ஏதோ ஏக்கம் நெஞ்சுள் புகுந்து கொள்கிறது. சாவுடன் ஊடல்?

என்னென்று தெரியவில்லை, இப்போதெல்லாம் தனி மையை விரும்புகிறேன். இல்லை. அதன் சுழிப்பு என்னைத் தன்னுள் இழுக்கிறது. சப்பாத்திப் புதர்கள்; ஆற்றுமணல் மேடு, வெறி பிடித்தாற் போல் நடக்கிறேன். நடந்து கொண்டே யிருக்கிறேன். திகைத்து நிற்கிறேன், இங்கே எப்படி வந்தேன்? நெற்றிப் பொட்டைத் தேய்த்துக் கொள்கிறேன்.

பசியில்லை. பருக்கைகூடச் செல்லவில்லை. அகோரப் பசி. மூன்று முறம் இருந்தாலும் பற்றி

வில்லை.

பாலாவின் கண்களில் -2பதிலுக்கு நான் -?என்ன எனக்கு வந்திருக்கிறது?

C} o {o}