பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு 195

மானேஜர் இப்போதெல்லாம் என்னை ஒரு மாதிரி

யாகப் பார்க்கிறார். எல்லாரும் தான். சிவராமன். Crack Fellow!” என்னில் பார்க்க என்ன இருக்கிறது? என் முதுகே எனக்குத் தெரியும் போல ஏதோ

கண்ணாடித் தெளிவு, வெறிச்சு, லொட்டை மானேஜர் பார்வையில் கருணையுடன் கபடு ஒன்று

தெரிகிறது. மானேஜர் என்னைக் கவனிக்கிறார். தஞ்சாவூருக்கு interview-க்குப் போய் வந்தாச்சு. Regional Manager கொம்பு முளைத்த மாதிரி நடந்து

காள்ளவில்லை. ‘உன் மானேஜர் உன்னை ரொம்ப சிபாரிசு செய்தி

ருக்கிறார் அவரை விட உன்னை நான் வடி - கட்டப் போவ

(3a). we are

good friands.இருந்தாலும்”- என்ற பீடிகைக்குப்பின் என வேலைக்குச் சம்பந்தமிலாமல் ஒன்றிரண்டு

கள்விகள் . பிறகு உத்யோகத்தில் நாணயத்தைக் கடைப்பிடிப்பது

பற்றி தனக்கே பழைய பாடங்களைத் திருப்பிக் கொள்வது

போல புத்திமதி லெக்சர் ஆரம்பித்து விட்டார். சான்ஸ்

கிடைத்தால் போதும், அவரவர் குரலை எப்போடா கேட்போம்

என்று காததுக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் பிறர்க்குப்

புத்திமதி

செல்வதென்றால் அலுப்பே கிடையாது. வாழ்க்கையில் அலுப்புத் தட்டக் காரணமே புத்திமதிகள் தான்