பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு

களில் லேசான மெத்திடல் சுவர் மூலையில். சிலந்தி தன் கூட்டைப் பொற்சரடுகளால் கட்டியிருக்கிறது. பொன் வண்டு ஒன்று முகத்தெதிரே Zoom அடிக்கிறது.

பால்கனிக்கு வந்து பார்க்கிறேன் தோட்டத்தில் பாலா செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருக் கிறாள்.

பக்கத்தறையிலிருந்து மானேஜர் அம்பி, வேலையா யிருக்கையா?”

“என்ன ஸார் வேனும்?

பாலாவுக்குக் கொஞ்சம் help பண்ணேன்!’

0f course! விழுந்தடித்துக் கீழே ஒடுகிறேன்.

கொல்லை வாசற்படி தாண்டுகையில், அடி சறுக்கிநான் வந்த வேகமோ, கீழே சிந்தியிருக்கும் தண்ணிரின் வழுக்கலோ, - ‘ஆ!” என் அபயக் குரலுக்குப் பாலா திடுக்கெனத் திரும்ப- அவள் மேல் நான் விழுந்தேனோ, என்மேல் அவள் விழுந்தாளா? அவளைத் தாங்கிக் கொண் டேன்.

பக்றிச்!”

அந்த அமானுஷ்ய மிருகக் குரலை என்னென்று

சொல்ல? அவள் என்னிடமிருந்து தி மி றி த் துள்ளிய வேகம்ே அவளை நாலடி கொண்டு போய் வீழ்த்திற்று.

வீல்-வீல்-வில்- உச்சமும் கட்டையுமாய் சப்தங் கள்-அலறல்கள், ஓயாமல் அவளிடம் வந்த வண்ணமிருந் தன. கோரம் தாங்காது செவிகளைப் பொத்திக்கொண்டு விட்டேன்.அப்படியும் செவிகளைத் துளைத்தன. குரங்கா, பட்சியா, கீரிப்பிள்ளையா-அவளுடைய உடல் பூரா அவளுடைய பூமியோடு கிடுகிடென ஆடிற்று. முகத்தில் மாறி மாறி அந்தத் திகிலையும், கோபத்தையும், பைத்யத் தையும்-முகத்தை மூடிக் கொண்டு விட்டேன்.