பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 @ffff

பொடியும் வேண்டாமா? முதலில் சொல்லு, அரிசியும் உளுந்தும் வேண்டாமா? நாளடைவில் அவளும் களைத் துப் போய்விட்டாள். அத்தோடு நான் ஒரு கொசிர். எனக்கும் கால் குளைச்சும் போச்சு. காமுப்பாட்டிக்கு, அவள் வசைமாரிக்கு இரண்டு திட்டு, கூடக் கிடைச்சுப் போச்சு.

‘ஏண்டா ஒடுகாலி திண்ணைத்துரங்கி! இங்கே விட்டு ஒடிப் போனயே! எங்கே போனே? எந்த எச்சிலைக்கிளறித் தின்னே?”

எனக்கு ஏன் இப்போ காமுப்பாட்டி மேலே கோபம் வரமாட்டேன்கறது? அவள் திட்டத்திட்ட அவள்மேல் ஒரு பரிதாபம் தான் ஏற்படுகிறது,

“எலே குழந்தே போனதெல்லாம் போச்சு. அதான். திரும்பி வந்தாச்சுஒண்ணு சேர்ந்தாச்சு.

“அப்படியா?” -

அவள் பேச்சுக்குக் கட்டை கொடுத்தாற் போன்ற அந்தக் கேள்வியில் தடுமாறுவாள்.

“என்னடா சொல்றே அந்தக் கேள்விக்கென்ன அர்த் தம்?” -

எனக்கே புரிந்தால் தானே? காமுப் பாட்டியைப் பார்த்தால் பாவமாயிருக்கே. நயமாகவோ பயமாகவோ என் கதையை நான் கக்கிவிட எதிர்பார்க்கிறாள்.

“என்ன பாட்டி, இதென்ன கதையா சொல்ல?

  • 5

சொல்றதுக்கு என்ன இருக்கு

“என்னை என்ன அவ்வளவு மக்குன்னு நெனச் சுட்டியா? உன் பதில் கேள்வியிலேயே உன் மழுப்பல் தெரியறதே! எங்கே கிளம்பிட்டே? இரு இன்னிக்கு உனக்குப் பிடிச்ச பண்டம் ஒண்னு பண்ணியிருக்கேனே-”

“என்னது ?”