பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு 3{}3

“அந்த நிலைகண்டு, நாங்களாகக் கண்டு கொண்டது தவிர

என்ன?

tLJfrfr ?

எப்படி?

எப்போ?

ராப்பூரா பாலத்தடியில் கிடந்தாளா?

பூவைக் கசக்கினவன், கசக்கினவர்கள்,

எப்போ அங்கே போட்டான்கள்?

இடையில் நினைப்பு வந்ததா?

கேள்விகளுக்கு முடிவேயில்லை.

இன்று வரை பதிலுமில்லை.

‘ஆனால் ‘கியா முயா கொக்-கொக் இதுமாதிரி ஏதேதோ சப்தங்கள்.

‘திடீர் திடீர் என்று வீல் வீல்”. ஓயாத அலறல்கள்தான் வரதே தவிர அவளிடமிருந்து வாய் வார்த்தையா ஒரு விவரம் அகப்படவில்லை. புத்தகத்தில் நடு ஏடுகளைக் கிழித்த மாதிரி ஆகிவிட்டது. கிழித்த ஏடுகளைச் சுக்கல் சுக்கல்களா, மறுபடியும் மறுபடியும் பொடிப் பொடி யாக்கி நாலு திக்கிலும் அடையாளமே தெரியாமல், அகப்படாமல் துவியாச்சு. இப்படியெல்லாம் சொல்லும் போது நாடக பாணியாகத் தோணலாம். ஆனால் வேறு எப்படிச் சொல்வது? நீயே சொல். அதுதான் முன்னும் இல்லாமல் பின்னும் இலாது நடுக்கதையும் கிடைக்காமல், எத்தோடும் ஒட்ட முடியாமல் தத்தளிக்கிறதை நீதான் பார்க்கிறையே! இந்த மாதிரிப் புத்தகத்தைப் பைண்டு பண்ணி என்ன பயன்? படித்து என்ன அறிந்து கொள்ள முடியும்?