பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 SofT. SF. IfT.

நம் இந்து சமயத்தில் கலியானமாகாத கன்னியாக, இளவயதிலோ வயது வந்தோ காலமாகி விடுகிறவர்கள் எல்லோரும் விஷ்ணுவுக்கு வாழ்க்கைப் பட்டவர்கள் என்று ஒரு ஐதீகமுண்டு. அவர்களுடைய ஈமச்சடங்குகளில் அந்த அர்த்தத்திலேயே மந்திர ப்ரயோகம் வருகிறது. பாலாவும் அதே போல், அந்த மஹாபுருஷன் விஷ்ணுவுக்கு அர்ப்பணமானவள்தான்.

சில சமயங்களில்-அவளுள் என்ன கிளர்ச்சி நேரு கிறதோ, தம்பூரை மீட்டிக் கொண்டு!-அதுபோல் நேரும் Poor Childs she has her cross to beat and she is our cross, அம்பி, இங்கிலிஷ் ஒரு அருமையான பாஷை. அதை நீ நன்றாகப் படிக்கவேண்டும். நாளடைவில் அந்த பாஷைக்கே ஆத்ம சாந்தி தரும் சக்தி இருக்கிறது. சரி, நான் மாடிக்குப் போய்க் கவனிக்கிறேன், உனக்கு ஆபீஸுக்கு நேரமாயிட்டுது.”

{} {} ‘அம்பி என்ன ஒருமாதிரியா இருக்கான் ?” ‘இன்னிக்கென்ன கொஞ்ச நாளாகவே அப்படித் தானே இருக்கான்.” “எல்லாம் வயசுக் கோளாறுதான்” ‘ஒரு கலியாணத்தைப் பண்ணி வெச்சுட

வேண்டியதுதான்.” “அப்போ அவன் மாத்திரம் திருப்பிக் கேட்க மாட் டானா, உங்களுக்குக் கலியாணம் ஆயிடுத்தான் னு ?”

‘நாம சினிமாப் போறோம், டிராமாபோறோம், அரட்டை அடிக்கிறோம், அல்காத்தனம் பண்ணறோம், ஒண்ணு பண்றானா ? ஒரு கெட்ட பழக்கம் உண்டா ? முசுடு, காசு சேர்க்கிறது, ஒண்ணுதான் குறி’

“மானேஜர் அடிக்கடி மட்டம் போடறார் இல்லே ?” ‘ஆபிஸர்ஸ் என்ன வேனுமானாலும் செய்யலாம், கேக்கறவா யார் ? நமக்கு ஒரு ரெண்டு நிமிஷம் தள்ளிப்