பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு

ஊருக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லாது போல், தொப்புள் கொடி அறுந்து விட்டாற் போல், இங்கு ஏன் வந்தேன்? இங்கு இனி எனக்கு என்ன வேலை? அதற்குள்ளே இவ்வளவு நன்றி கெட்டவனாக எப்படி ஆனேன்? முதலில் அதுவே எப்படி சாத்தியம்? இல்லை, இதெல்லாம் ஒரு கனா. இங்கு இதுவரை நான் இருந்ததே ஒரு கனா. மீண்டும் அதே கனவுள் புகுவது என்பது கிடையாது. இது இன்னொரு கனா. கனவுக்குள் கனா. ஒண்ணுமே புரியவில்லை. பூமியில் கால் ஒட்டி நடப்ப தாகத் தெரியவில்லை. ஏதோ ஒரு விரக்தி,

தெருவில் என்னைப் பாாதது ஒரிருவர் தயங்கி நிற்கிறார். ஆனால் என் முகம் அவர்கள் பேச்சுக்கு இடம் கொடுக்காததால் அவர்களுடைய கு ழ ப் பம் அதிகரிக்கிறது. என்னை ஒருவருக்கொருவர் சுட்டிக் காட்டுகிறார்கள். நான் குற்றவாளியா? சாrயா?

நேரே டாக்டர் வீட்டுக்குச் செல்கிறேன். நல்ல வேளை ஒழிவாய்த் தானிருக்கிறார். எத்தனை தடவை

மானேஜருடன், மானேஜர் உடம்புக்காக இவரிடம் வந்திருக்கிறேன்!

    • sum ibi $! i am sorry. Conventional &rra. j5

அவங்களுக்கு உறவுகூட இல்லை, தெரியும். இருந்தாலும் நீதான் அவங்களோடு வீட்டோடு நெருங்கிப் பழகி யிருக்கை அல்ல? ஆனால் உங்க மானேஜர் என்ன இப்படி செய்துட்டாரு? சேச்சே!”

இப்படிக் கொஞ்சநேரம்.

அப்புறம் விஷயம்.

‘பத்து நாட்களுக்கு மு ன் னா லே வந்தாரு. தொண்டை வலிக்குதுன்னாரு. சாப்பிட்டால் விழுங்கக் கஷ்டமாயிருக்குன்னாரு.

க-14