பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு 13

‘நான் ஏன் சொல்லனும் ? நீயே பார்த்து ஆ ங்கப் போறே இதோ வந்துட்டேன்.-- சமையலறைக்குப் போகிறாள்.

பயமாச்சு,

நயமாச்சு,

இப்போ லஞ்சம்.

அடுத்தது உதை.

எனக்குப் பயமாய்க் கூட இல்லை, அலுப்பாயிருக் கிறது. நானும் இதோ வந்துட்டேன். ஆனால் சொல்லிக் கொள்ளவில்லை. கிளம்பி விடுகிறேன். திருப்பி வந்ததும் பூசை நிச்சயம். ஆனால் கூடவே பண்ணின பண்டம் நைவேத்தியமும் நிச்சயம். நம்மை விட்டு எங்கே ஒடிப் போகிறது ? நாய்க்குத் தூக்கிப் போட்டு விடப் போகிறாளா? அந்த அளவுக்குச் சட்டியில் எங்கேயிருக்கு?

ஊர் எல்லையில் ஒரு புளியந்தோப்பு. அதன் நடுவே ஆலமரம். அதன் கிளையில் இரண்டு அகன்ற விழுதுக் களிடையே, சங்கிலிகளில் தொங்கும் குட்டி ஊஞ்சல், சங்கிலியின் உச்சி வளையம் ஒன்றில் குஞ்சம் கட்டிய ஒரு புல்லாங்குழல் கட்டிவைத்திருக்கிறது. பெளர்ணமியன்று முழுநிலா உச்சி மண்டைக்கு நிற்கும்போது புல்லாங் குழலுள்காற்று புகுந்து கொண் டு, குழல் தானே வாசித்துக் கொள்கிறதாம். கேள்வி தானே அன்றி, கேட்டவர்யார் ? அதுவும் ஒரு கேள்விதான்.

காதலில் தோல்வியுற்று, தற்கொலை செய்து கொண்ட காதலரின் ஆவி புல்லாக்குழலில்

அல்லது பாம்பு பிடிக்கும் குருவிக்காரன்

அல்லது மாட்டிடையன், வழிவழியாய்த் திரித்தகதை நிஜமாயிருந்தாலும் சிளிமாக்கதை

எப்படியோ விதவிதமாகச் சொல்லி ஒரு வழியாக எல்லோருக்கும்