பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு &

‘இதென்ன அமுக்கி வெக்க முடியுமா என்ன ? கேக் கனுமா, ஊரே ‘கொல் ஆயிட்டுது.

“போலிஸ் ஸர்ஜன் வந்து ரெண்டு வயித்தையும் அறுத் தான். மோட்டாக் குதிரையைக் கீழே தள்ளி அடைச்சுடும் அத்தினி தூக்கமாத்திரை நானே அவருக்கு எளுதிக் கொடுத்திருக்கேனே, ஒரு நாளை ஒண்ணுன்னு, இப்படி யில்லை’

நான் எழுந்தேன்.

‘ஒ, உனக்கு ஒரு லெட்டர் எளுதி வெச்சிருக்கார்"என்னிடம் ஒரு கவரை எடுத்துக் கொடுத்தார். ‘இன்னொண்ணு H.C.க்கு எளுதியிருக்கார். அவருடைய P. F , gratuity F.D., R. D. கணக்கிலே தொகைகளின் பட்டுவாடா பத்தி. கோவில், குளம், உபகாரச்சம்பளம்: ஆஸ்பத்திரின்னு தருமத்துக்கு வேறே எளுதி வெச்சி ருக்கார். ரெண்டு லெட்டரையும் போலிஸ் திறந்து பார்த் தாச்சு, துப்பு ஏதாச்சும் கிடைக்குமான்னு. ஒழுங்கா சீல் வெச்சுத் தன் கட்டில் பக்கத்தில் வட்ட மேசை மேல் இரண்டும் இருந்தது. துளக்க மாத்திரை சீசாவுடன். சீசா empty.”

திடீரெனச் சில் காற்று அறையுள் வீசிற்று. உடம்பை ஒடுக்கிக் கொண்டேன்.

‘பெண்ணை அவள் அறையில் துரங்க வெச்சுட்டுத் தான் துரங்கறதுக்கு முன்னாலே தன் விவகாரங்களை 96.5%gst gavajCtif. Really a cool head, you know. adrimire him.”

{O {} {}

‘அம்பிக்கு ஆசீர்வாதம். உன் கணக்கில் ரூ 5000 credit பண்ணியிருக்கிறேன்.

முத்தையாவுக்குத் தென்னந்தோப்புக் கி ர ய பாக்கி செலுத்திவிடு.