பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு 15

ஒன்றும் இருக்கக்கூடாதா ? அதுவும் புத்தம் புதிதாக முதன்முதலாகக் கிடைத்தது.

{} { {}

நான் ஒடிப் போனேனா? ஒடிக்கொண்டேயிருந்தேன், ஒடவேண்டும் என்று திட்டம் போட்டுக் கொண்டா ஒடினேன் ? காமுப் பாட்டி என்னை உரித்துப் பார்க்க வேணும் என்று திடீரென அவளுக்குத் தோன்றிய ஆசையினின்றல்லவா தப்பித்து ஒடிக்கொண்டிருக்கிறேன்! உண்மையாவே பந்தயத்தில் ஒடுவதுபோல் ஒடிக்கொண் டிருக்கிறேன். எந்த நிமிஷம், எந்த மரத்தின் பின்னா லிருந்து. சப்பாத்திப் புதர் நடுவிலிருந்து காமுப்பாட்டி தோன்றுகிறாளோ எனும் திகில். அத்தைை அசட்டுப் பயம், ஆனால் நிஜபயம்.

சாலையின் குறுக்கே பாலத்தினடியே வாய்க்கால் ஒடியது.

ஆற்றங்கரை மேடு என்னோடு ஓடிவந்தது.

அதன் மேல் பனைகள், வியப்புடன் என்னைத் திரும்பித் திரும்பிப் பார்த்தன.

என்னபையா ஒடறே ?

வயற்புறம் நெற்பயிர் சீறிக்கொண்டே என்னை நோக்கித் தலையாட்டிற்று.

வானில் பறவைக் கூட்டம் ஒன்று வரிசை கட்டி என்னைக் கண்காணித்தபடியே பறந்தது.

எந்த ஊர் பத்திக்கிட்டு எங்கே தம்பி ஒடுறே? மெள்ளத்தான் ஒடேன்?

ஏற்றப்பாட்டை மெனக்கெட்டு நிறுத்துவிட்டு எனக் குப் பின்னால் கத்துகிறான். -

எல்லோரும் என் எதிரிகள்,