பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Jo லா. ச. ரா

ஊர் எல்லையில் கருப்பண்ணன் கோயில் வாயிலில் ஒருயானையும் ஒருகுதிரையும் சிலைநிற்கின்றன. உயிர் இருந்தால் குதிரைமேல் ஏறித் தட்டிவிடுவேன். தேசிங்கு ராஜா நான்.

ஒரு ஆலமரத்தின் கீழ் ஒரு சுமைதாங்கி அடியில் ஒருத்தி கோணிக்கந்தலை விரித்து அதன்மேல் சுட்ட பனங்கிழங்கும், தோலோடு வறுத்த வேர்க்கடலையையும் கூறுகட்டிவைத்து, எதிரே உட்கார்ந்துகொண்டு இருக் கிறாள் வியாபாரமில்லை. அவளுக்குப் பொழுதும் போக வில்லை. கூறிலிருந்து ஒரொரு கடலையெடுத்து னக்’ கென்று பூமியில் நெத்தி, உரித்து வாயுள் எறிந்து கொள்கிறாள் பக்கத்தில் கூடையில் காராமணிச்சுண்டல் மேல் ஒரு ஈக்கூட்டம் ரொய்ஞ்ஞ்'-அளந்துபோட, அதிலேயே கிடக்கும் அவ்வளவு குட்டிக் கொட்டாங் கச்சி மழமழ எங்கே பிடித்தாள் ?

பார்த்ததும் பசி முழு நினைப்புடன் எழுந்து வயிற் றைக் கிள்ளுகிறது. துட்டு ?

எல்லாமே என் எதிரிகள். காமுப் பாட்டியைத்தவிர. ஏனெனில் அவளை இதுவரை காணோமே! இருள் படுதா அவிழ்கிறது. இலுப்பந் தோப்பு. தாண்டி ஆற்று மணல். நாடா போல் ஜலம் சிறுக ஒடுகிறது. எதிர்க் கரையில் கத்தாழைப் புதர்களிடையில் ஒரு ஒற்றையடிப் பாதை ஊருக்குள் நுழைகிறது. * ரொம்ப தூரம் இடி வந்து விட்டேன். வழி, இடம்

தெரி யா ம ல். பின்னால் விசாரித்துத் தெரி ந் து கொண்டேன். .