பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு 37

இந்த ஊர் பேர் வாடாவூர். கதைப்படி, எங்கு பஞ்சம் வந்தாலும், இந்த ஊருக்கு மட்டும் கறுப்பு கிடையாதாம்.

எவனோ குடியானவன் பசி வேளைக்குப் பங்கிட்டுக் கொண்ட கஞ்சியைக் குடித்துவிட்டு, அவ்வைக் கிழவி ஊருக்கே வரம் பாடி விட்டாள். வாடாமல் வாழுங்கள். ஒடஒடப் பாதை விரித்து அக்ர காரத்தில் கலந்தது. பணக்கார ஊர் போலும். - உயர்ந்த படிகள்மேல் அகன்ற கொறடுகள். அடுத்துப் பட்டாளம் படுக்கிற மாதிரி நீண்டு, விசாலமான திண்ணைகள். இடையிடையே கோபி அடித்த மாடி வீடுகள். கோட்டைபோல் கனத்த சுவர்கள். கனத்த கதவுகள் தெரு முனையில் பெருமாள் கோயில்.

ஸ்து பிமேல் ஒரு கருடன் உட்கார்ந்து கொண்டு, சிறகுகளைக் கோதிக் கொண்டிருக்கிறது. கோயில் வாசலுக்கெதிரே நின்று ஒருத்தி, தண்ணிர் சேந்திக் கொண்டிருந்தாள். ஒடி ஒடி நாக்கு வறண்டு போனது அவள் தண்ணிர் மொள்வதைக் கண்டதும்தான் ஞாபகம் வந்தது.

கிணற்றடியில் தயங்கி நின்றேன். குடத்தை லேசாய்க் கிணற்றுச் சுவர்மேல் சாய்த்தபடி அவள் காத்துக் கொண்டிருந்தாள். நான் இரு கை களையும் குழிவு சேர்த்து ஏந்திக் இனிந்தேன்.

குடத்திலிருந்து நூல் ஸ்படிகம் சரிந்து- அம்மாடி! அதன் குளுகுளு உள்ளே உடல் பூனா பரவிற்று. குடத்தையும் குடித்து விட்டேனா? எனக்குத் திடீரெனக்

க-2.