பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 of fr. அந்தப் பெண் சமையலறையிலிருந்து வெளியே வந்து பட்டரின் கைப் பொருள்களை வாங்கிக் கொண்டாள். என்னைக் கண்னெடுத்துக் கூடப் பார்க்கவில்லை. நீ யாரோ? நான் யாரோ? ஆனால் உதட்டோரம் புன்னகை லேசாகப் பளிச்சிட்டதோ?

‘ஜனா, இலை போடு.” ஆஹா, உலகத்தின் வேதங்கள், ஞானங்கள், உபதே சங்கள் அனைத்தும் இந்த இரண்டு வார்த்தைகளுக்கெதிரே என் செய்யமுடியும்?

ஆறிப் போன விறைத்த சாதம். கோவில் நைவேத்தி யத்துக்குச் சுருக்கவே வடித்து விடுவார்கள் போலும்! எத்தனை சாமிக்கு ஒன்றையே காட்டிக் காட்டி, எத்தனை காற்றில் சில்லிட்டுப் போனதோ?

கறிவேப்பிலைத் துவையலில் அரை உப்புத்தான். படு காரம்,

அடுத்ேத நேரே மோர் இல்லை, நீரில் மோர். நீரின் நிறத்தை மாற்றி.

துவையலில் மொத்தை அடித்தேன், பாதிதீர்ந்த பின், ஆளுக்கு ஒரு அ ப் ப ள ம் கொணர்ந்து போட்டாள், சிட்டுச் செவந்து லேசாகத் தொண்டையடியில் கசந்தது. அதனால் என்ன ? முதலில் தொட்டுக்கவே அவசியமா என்ன? பசித்தவயிறுக்குத் தான் கருகிய அப்பளத்திலும் கூட அமுதத்தை அடையாளம் கண்டு கொள்ள முடியும். என்னை ஆட்சேபித்த அம்மாள் கடைசி வரை என் கண்ணில் தென்படவேயில்லை, சமையலறையில் நட மாட்டம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது.

சாப்பிட்டுக் கையலம்பினம் நான் திண்ணைக்கு வந்து விட்டேன்.

உடனே வாசற்கதவும் மூடிற்று. அவள்தான் சார்த்தி னாள். கதவு பூரா மூடிக்கொள்ளுமுன், அவள் விழிகள்