பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு

ஒரு முறை முழுதாக என் மேல் தங்கின. தெருவிளக்கின் வெளிச்சத்தின் நிழல் சூதில் அந்தப்பார்வையை, அந்த முகத்தை, நான் என்றும் மறக்க முடியாது.

பதினெட்டு, இருபது இருக்குமா? இருக்கக் கூடாதா? ஆன வ ய ைத எனக்காகத் தி ரு ப் பி ைவ க் க முடியுமா? வைத்துக்கொள்ளேன்’ அதில் நீ ஒரு திருப்தி கண் டால்; உன்னைவிட வயது கூடினவள் மேல் உனக்கு உணர்ச்சி ஏற்படக் கூடாதா? நெஞ்சோடு இறுக்கச் சேர்த் துத் தழுவிக்கொள்ளும் இந்த நினைவில், அதன் முதன் மையின் தூய்மை, முதல் வியப்பு, இதயத்திற்கு முதல் பாசனம் பாறை மேல் பாயும் அருவி போல் பளபளக் கிறது.

(E {}

அவை விழிகள் அன்று. ஆழிகள்

முழு மனதுடன்

என்னை என் முழுமையில்,

விடிகாலைப் பூஜையில்

அர்ச்சனையின் முதல் நாம வளியில்

அம்பாளின் பாதத்தில்

அப்பொத்தான் பறித்த மலரின், இதழின்,

இதழ்களின் நிறத்தின்

மணத்தின்

மலர்ச்சியின்

முழுமையுடன்

அர்ச்சனையின் விரல் நுனிகளிலிருந்து

மெத்தெனக் கழன்று

என்னை ஆவிர்ப்பவித்துக் கொண்டு

ஆழியில்

மூழ்குகிறேன்.

இந்த மன முவந்த தன்னழிவில், ஏதோ விரக்தி யான இன்பம் தெள்ளுகின்றது.