பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 @fr

என் பெயர் இப்பொழு ஆவிர்ப்பவன்’ ‘கந்தர்வன்’ போல். நாவில் உருட்டிச் சுவைக்கிறேன். எனக்கு ஒரு புது வார்த்தை கிடைத்துவிட்டது கவிதை என்பது இப்படித்தான் பிறக்குமோ? ஒரு சொல்லிலும் கவிதை உண்டோ? முழுக்கவிதை. இதோ இன்று ஆலமரத்தடியில், ஊஞ்சலில் கவிழ்ந்த படி, நான்ே படகு, நானே அலையாய், அலை தள்ளிய வழி படகை மிதக்கவிட்டுக்கொண்டு, படகில் படுத்தபடி, ஊஞ்சலின் மெத்தெனத் தன்னசைவில் மனதைப் படகாட விடுகையில், அந்த முகத்தை மறக்க முடியாது. மறக்கவும் கூடாதென்றே நினைக்கிறேன். அம்முகத்தை முழு மூர்க்கத்துடன், அன்று கதவுக்கிடுக்கில், அந்த நொடி நேரம் கண்டபடி, நினைவின் புதைவின் அடியிலிருந்து வரவழைக்கிறேன்.

-35 a கீழ், சிறுவிரல் நகத்தளவுக்குப் பிறை {! ,

சின்ன வயதில் எங்கு விழுந்த காயமோ? காது, கழுத்தில், நகை பார்த்ததாகத் தெரியவில்லை மூக்கில் ஒரு பக்கம் மட்டும் பொட்டு? கண்டேனோ?

go { எங்கள் ஊரை வளைத்து ஒரு வாய்க்கால் ஒடுகிறது. வடக்கு. எல்லையில் ஜலம் ஸ்படிகம் உன் நெஞ்சின் பிம்பத்தையே பார்க்கலாம். என் நெஞ்சின்- இல்லை வேண்டாம். தண்ணிர் இங்கேயும் கலங்கணுமா?

ஆனால் மற்ற திக்குகளில் அந்தத் தூய்மை இல்லை. கீழண்டே ஒரே கறைசல். ஏன்? ஒருநாள் வாய்க்காலின் வடக்கு நூலைப் பிடித்துக் கொண்டு, கரையோரம் நடந்து கொண்டே போனேன்! எங்கெங்கோ போயிற்று.