பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு 25.

எண்ணெய் கட்டி விடுவான் பாரு. வத்தல் மிளகாய் இல்லை, பச்சை மிளகாய் போட்டுக்காய்ச்சின எண்ணெய், நாங்கள் அப்புறம் கண்ணையே திறக்க முடியாது, அந்தக் கேசைப் பொறுத்தவரை அந்தக் கேஸ் அந்தக் கேஸ்ணு அந்தந்தக் கேஸா கடவுள் போட்ட தாயமானாலும், அவரே கண்ணைக் கசக்கிட்டுத்தான் பாக்கனும். தாயம் அவருதா குப்புசாமிப் பிள்ளை போட்டதா, அடப் பைத்தியக்காரா நீ ஆடிக்கிட்டேயிரு. தாயம் போட்டுக் கிட்டேயிரு. பந்தயம் அத்தனாச்சியும் என்னதுதான். குரங்கு நியாயம் குப்புசாமிப் பிள்ளை கஷ்குமுஸ்கு கட்டை உடம்பை தாயக்கட்டான் மேலேயே கவிழ்ந்து படுத்துக் கிட்டு குட்டைக் கையால் கட்டான் கட்டானக், அத்தனை வயலையும் அணைச்சுப் போட்ட சொத்தல் லவா இது?

இப்போ, ஸ்பஷ்டமாக அதற்குரிய பாஷையில் புரிகிறது. ஆனால் அப்போ கண் கண்டதை கண்ணால் பார்த்துக் கொண்டு வாய்க்கால் கரையோரம் அது போகும் வழி வளைந்து ஒடுகிறேன்.

திடீரெனப் புளிச்ச கஞ்சியின் வெடிப்பு நாற்றம் வாடைக் காற்றில் வலுக்கிறது. மூக்கைப் பொசுக்கிறது குடலைக் குமட்டுகிறது. திருப்பத்தில் ஜலத்தைம் பாம்பு தீண்டினாற் போல் கறும் பச்சையாய், மலைப்பாம்பு தடுமனுக்கு ஒரு சாயம் நீளமாய்க் கரையிலிருந்து நெளிந்து வந்து கலக்குகிறது. ஓ, இது தானா கலங்கலுக்கு நான் ஓடி ஒடிக் கண்டு பிடித்த காரணம் ?

இத்தனையும் ஏன், எதற்கு, இத்தனை விஸ்தாரமா மனசில் கோலமோ கிறுக்கலோ போட்டுக் கொண்டு வந்தது, ஆ, ஞாபகம் வந்து விட்டது.

ஒரு நாள்-ரொம்ப ரொம்ப நாளுக்கு முன்னால்,

- சொல்கிறேனோ என்னவோ எனக்கு ஆறு வயசு ஏழு வயசு இருக்குமோ என்னவோ