பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு 37

எங்கேவோ போகிறது. அதன் கூடு இங்கே இருக் காது. இந்தக் குட்டை மரங்களுக்கா அந்த லாயக்கு ? இவை எங்கே அந்த உயரம், அந்த கனம், அந்த எழுச்சி அந்த திருஷ்டி வீச்சு, தனிமையின் லஷியம், தனிமை யிலிருந்து அலகசியம், அந்த ஸ்ார்வபெளமம் தாங்கும் ?

அதோ மோகாம்பரி மலையை நோக்கித்தான் போய்க் கொண்டிருக்கிறது. அதன் எந்தப்பாதையில் அதன் கூடோ, கூட்டில் அதன் குஞ்சுகளோ ?

மோகாம்பரி மலை இதோ எட்டிப் பிடிக்கற மாதிரி தோன்றுகிறது. ஆனால் இங்கிருந்து பத்துக் கல்லுக்குக் குறையாது. - -

மலைமேல் மோகாம்பரி, வெள்ளியோடு சேர்ந்த அமாவாசையன்று அங்கு ரொம்ப விசேஷம். உள்ளே ஒளிந்து கிடந்ததெல்லாம் சன்னிதானம் அடைந்ததும் தலைகால் தெரியாது ஆடும். கூந்தல்கள், ஒயாத சாமரங்கள் ஆகிவிடும். நரம்புக்கு நரம்பு, அதனதன் தனித்தனி அடையாளங்களுடன் ஆவேச ஆட்டத்தில் துடிக்கும் - : -

பூசாரிகிடையாது. அவரவர் கொணர்ந்த பலியை அ வ ர வரே கொடுத்து, அவரவரே பூசையிட்டுக் கொள்வதுதான் அந்த இடத்து ஐதீகம். பொங்கல் வேகும் தீக்கள் உடலை ஊ டு ரு வி ய தடிக் கம்பியில் அப்படியே திருப்பும் இறைச்சி வேகும் தீக்கள் கசக்கிய கண்கள் போல், மலையுச்சியில், சரிவில், அடி வாரத்தில், படிப்படியாக விழித்துக் கொள்ளும். இரவு பூரா தன்னை சூழச்சிந்தும் குருதியைப் பார்த்துக் கொண்டு, பக்தர் அவ்வப் போது தீற்றும் ரத்ததிலகம், நெற்றியில் பளபளக்க, ஒழுக ஆணும் பெண்ணுமாய் கடிவாளம் அறுந்த இச்சைப்படி வெறிபாடும் கூத்தின் நடுவே, மோகாம்பரி தேவி தன் மேட்டு விழிகளில் கருணை பொழிய வீற்றிருப்பள்.