பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடுகு

என் கழிவிரக்கத்தில் எனக்கு அழுகை வந்துவிட்டது. “என்னடா நூத்துக் கிழவா எனக்கு ப்ரசங்கம் பண்ண வந்துட்டே?”

‘பாட்டி, உன்னுடைய ஆதங்கங்களுக்கு என்னைப் பயன்படுத்திக் கொள்ளத்தானே என்னைத் தேடிப்பிடிச் சுண்டு வந்தே?”

‘எச்சக்கலை என்னடா சொல்றே?”

‘சின்னப் பிள்ளைகளுக்கு என்ன தெரியப் போறது ன்னு, உன்னைபபோல, வயசு காலத்தில் வேகம் தணியாத பெரிய வாள் நினைச்சுண்டுடறேள். சின்னப் பையனுக்குத் தூக்கக் கலக்கம், கனாவென்று கண்டானா நனவென்று கண்டானா, அதானே உங்கள் நினைப்பு? எதுவாயிருந்தா லும், நாக்கில் பல்லைப் போட்டு, நம்மைத் தைரியமா கேட்டுடுவானா என்கிற துணிச்சல் வேறே. ஆனால் என் னைக் கணக்கு வெச்சிண்டு சொல்றேன். குழந்தைகளுக்கு அதுவும், ரொம்பச் சின்னப் போதிலேயே ஞாபகம் படிஞ் கி. ப்து. அதுவும் என்னைப்போல் ஆரம்பமே ஏறு மாறாப் போயிட்ட கேட்க வேண்டாம். மனம் புழுங்கிப் புழுங்கி, முதலில் திகைப்பு, பிறகு துரோக உணர்வு, அடுத்தடுத்துக் களங்கம், அதன் விளைவாய் ஆத்திரம், கோபம், புத்திக்கேடு எல்லாத்துக்கும் உங்களாலேயே அஸ் திவாரம் நட்டாறது. இதெல்லாம் பொது. என்னைப் பொறுத்தவரை, ஆறுவயசுல என்னை உன் விளையாட் டுப் பொம்மையாகத் தூக்கிண்டு வந்துட்டே. எனக்கு ஒண்ணும் தெரியாதுன்னு என் எதிரிலேயே நீ பண்ணின தெல்லாம் பளிச்சுனு சொல்லவா? இதுக்கு மேல் வாய் விட் டுச் சொன்னால், ஒருவருக்கொருவர் முகம் பார்க்கவே வெட்கக் கேடு, ஊற்று ஜலத்தில் சாயக்கால் கலந்த மாதிரி பாட்டி, ஆண்டவன் சித்தம் நம்மிருவரை எங்கானும் கொண்டு போய்விடட்டும். ஆனால் இடையில் ஏன் இப்படி

க-3.