பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு

ஆழிகளின் அதல பாதாளத்தில் என் இதயவாயில் திறக்கப் போகிறது. கதவு ஒருக்களித்தாற்போல் திறந்தது. வாயில் துண்டு

பீடி. முதல் அதிர்ச்சி. குறைந்தது ஒரு மாத அழுக்குத

தாடி. சடைத்தலை இடுப்பில் லுங்கி.

“யாரு வேனும் ” இந்த பாஷையே வேறு

கோவில் குருக்களப்யா இல்லை ?”

கதவு இன்னும் கொஞ்சம் கூடத்திறந்தது. ‘'பட்டர் காலமாகி பத்து மாத மாச்சே நீ யாரு ?”

இன்னொரு அதிர்ச்சி.

“அ ப் போ அவர் குடும்பம் ? .ெ ப ண் ணு ம் சம்சாரமும் ?” தயங்கினேன். -

பொண்ணும் சம்சாரமுமா ? சம்சாரமும் மாமி யாரும்னு சொல்லு. அவர் காலமான கையோடு அவங் களும்-அம்மாவும் .ெ ண் ணு ம்-ஊரை விட்டுப் போயிட்டாங்களே ? நீ யாரு ?”

இந்த ஆளின் குரலே பிடிக்கல்லே. இவன் குரலும், பேச்சும், மரியாதையில்லாத நீ'யும். ஆளையே பிடிக் கல்லே. என்னத்தை எதிர்பார்த்து வந்தேனோ ஏமாந்து போனேன். அதனால் எதுவுமே பிடிக்கவில்லை.

எங்கே போனாங்க ?’’

‘ என்னைக் கேட்டால் ?”

அடிமேல் அடி. திண்ணையில் உட்கார்ந்துவிட்டேன், எதிரே கோயில் மதிலோரம் யாரோ ஒருத்தி கூடை சாணியைப் பொத்தெனக் கொட்டினாள், வரட்டி அறைய கோவில் மதில்தான் கிடைத்ததாக்கும். சீ-எதுவுமே பிடிக்கல்லே,