பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 697. F. grrr

‘நீ யாரு ?”

‘நான் அவங்களுக்குத் தெரிஞ்சவன், வெளியூர் போயிட்டேன். இங்கே ஒட்டல் ஏதாச்சம் உண்டா ?”

(ஏதோ என்னிடம் காசு கொட்டிக் கிடக்கிற மாதிரி}

‘ஒட்டல் கிடையாது ?’ பீடியை எறிந்தான் (அது ஏன் இவன் மீசையைச் சுட்டுப் பொசுக்கல்லே ? ‘கோவில்லே மதியத்துக்குப் பட்டை சோறு வழங்கறாங்க. இப்பவே சீட்டு வாங்கணும். ஏதோ பாழாப் போவாமே பசிவயித்துக்குப் போவட்டுமேன்னு வீணாப் போவாமே மக்கலரிசி. உள்ளுரான் எவனும் சீந்தமாட்டான். உனக்குப் போட்டியிருக்காது. அவன் சிரித்தான். பற்களிடையே இரண்டு பெரிய ஜன்னல்கள், யாராவது அந்தப் பற்களை உடைத்திருந்தால் எனக்குச் சந்தோஷமாயிருந்திருக்கும்.

சோறு பாதி. கல்பாதி. கூடவே சொன்னவன் சொல் அதிகப்படி.

ஆகவே பட்டை சாதம் மொத்தம் ஒண்ணரைப்பங்கில் மோர்ப்பஞ்சம் உப்பு எக்கச்சக்கம். ஊறுகாய் இல்லை. தொண்டையில் - சோறு விக்கிற்று. விழுங்கியது, வயிறு வலித்தது. இன்று கால் போனவழி மாலை எங்கே போய் விடுமோ ? வயிற்று விசாரம் அங்கு தொடரும். வாழ் நாள் முழுவதும் இதே வி ச | ர ம் தானா ? இதிலிருந்து விடுதலையே கிடையாதா ?

ஆனால் ஒன்று. எங்கு போனாலும் பின்னால் யார் துரத்துவாரோ, பயம் வேண்டாம். எது நேர்ந்தாலும் இனி எதிரே சந்திப்புத்தான்.

அப்படியும்-இது இப்போது கேட்கும் கேள்விஅ ப் படி யு ம் ஏன் ஒடிக் கொண்டேயிருக்கிறோம் ? உட்கார்ந்து கொண்டு, நின்று கொண்டு, படுத்துக் கொண்டு, தூங்கிக் கொண்டு- ஏன் ஒடிக்கொண்டே யிருக்கிறோம். ஏதோ ஒன்றிலிருந்து.