பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு

சொல்லாக வெளி வரும் போதுதான் சி ைத ஷ், பாணி, பொய்மை எல்லாம் தாமே தொடர்ந்து வந்து விடுகின்றன. ஏன் ? பூராவே எண்ணமாய், பேசாமல் அடங்கத் தெரிவதெப்போ? எண்ணத்துக்கும், பேச்சுக்கும், மோனத்துக்கும், சொல்லுக்கும் உறவின் உண்மையான தன்மை தான் என்ன? இது புரிந்துவிட்டால் உலகத்துடன் உறவின் சிக்கலே பிரிந்து விடுமோ என்னவோ?

ஆண்டவனே !

என் மானம்

இதுதான்

உன் முடிவா?

மரத்திலிருந்து விழுகையில் இப்படிச் சொல்லிக் கொண்டு தான் விழுந்தேனா ? வலி, கையைச் குடைந்து கொண்டே கழுத்து நரம்பு வழி மூளைக்கு ஏறுகையில் வாய்க்கு இவ்வளவு நீண்ட வசனம் பேசமுடிந்ததா ே அதற்கு நேரம் இருந்ததா ? யாரிடம் கேட்டுச் சரி பார்த்துக் கொள்ள முடியும் ? அப்படியே பேசியிருந் தாலும், ஆபாஸ்மாய், செயற்கையாயில்லை ? வெட்க கரம்...

ஆனால் சத்யமா, எழுந்த எண்ணம் என்னவோ இது தான். .

('சத்யம் வைக்காதே.ா !

தாய்தகப்பனுக்கு ஆவாதுடா !”

‘அவங்க எங்கே?’

‘இல்லாட்டாலும் ஆகாதடா வி ட் டே ன் னு சொல்லு.”

  • விட்டேன்')

ஆண்டவனே என்மானம் தான் உன் முடிவா ? ஒரு மைல் நீளம், இல்லை இரண்டு மைல். அதுவுமில்லை. எத்தனை எத்தனையோ மைல் கற்கள் திரும்பித்திரும்பி