பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 @

நினைவின் மீட்சியில் நீலத்தின் மாட்சி வானத்தின் சாயங்கள், வர்ணங்கள், வர்ணக் கழுவல்கள் எத்தனை உண்டோ அத்தனையும் ஆடி ஒய்ந்தபின் ஒடுங்கலுக்கு எல்லாவற்றுக்கும் தஞ்சம். மூலமும் முடிவும் நிராமயத்தின் நிரந்தரம் நீலமயம்தான்.

புவன மாளிகைக்கு நீலபவனம். பெயர் எவ்வளவு நன்கு பொருந்தும் !

{} {} இ

கற்கண்டு ஜீராவில் தோய்ந்தெழுந்தாற்போன்று, தாயனம் தேன் சொட்டிக் கொண்டு ஆலாபனையில் (என்ன ராகம் எனக்கு அந்த சமயம் இனம் தெரியாது; செவி வழி பு கு ந் து, கம்பீரமாய், சந்துஷ்டியாய், நிஷ்கவலையாய், பறவை வட்டம் இரண்டு பெரிதாய் உள்ளே அடித்து, என் கண் இமைகளுள், என் விடிவின் வர்ணம் மெத்து மெத்தென செந்திட்டுத்தான் என் சுய நினைவில் முதல் ஒத்தடம்.

தீட்டிய சித்திரத்துக்கு வைப்பது போன்று கண் திறந்ததும்- என் விழிப்பும் அப்படித்தான் இருந்ததுஜன்னலுக்கு புறம்பில் வானிலம் துல்லியமாய் ஒளி வீசிக் கொண்டிருக்கிறது. நான் ஜன்னலோரம் கயிற்றுக் கட்டிலில் கிடக்கிறேன்.

நாயனம் கனவு மயக்கமில்லை. நிஜம்தான். எங்கோ மாடியிலிருந்து வருகிறது. என்மேல்- என்மேல் என்ன, அறையின் மேலேயே, தானே தோரணம் கட்டித் தொங்கி அதில் தொங்கித் தாவி விளையாடுகிறது.

-ஆதம்பீ!’

திரும்புகிறேன். யார் இது? கேட்ட குரல். முகம் சற்றே சீன பர்மா வார்ப்பு. ஆனால் அழகு முகம்தான். ஒரு தினுசான மஞ்சள் சிவப்பு. லேசாய்க் கரகரத்த குரல். மணலைத் தேய்த்தாற்போல். :