பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு

நண்டுத் தெறுக்கால்லே பாதிக்கு மேலே ‘டார்ச்சுலே பட்டாட்டம் மின்னுது. அத்தாலேயே அடிச்சேனோ உனக்கு விஷத்திலே பாதி அப்பவே இறங்கியிருக்கணும். செந்தாமரை ஆள்கொண்டாருக்கு வேண்டிக்கிட்டா. மஞ்சாத் துணியிலே முடிஞ்சு வெச்சிருக்கா. அவள் கவலை வீடைக் கிரயமாக்கி இன்னும் ஆறுமாதம் ஆவல்லே. உடனே ஆள் காவி இன்னா வீடுமறுபடியும் விலை போவாதே சரி இந்தப் பேச்சை இப்படியே விட்டுடுவோம். என் பெண் சாதி என்னை முழியாலேயே வெட்டறா உனக்குத் தெரியுதா? அம்பியும் ஒரு தாய்க்கு மவன்தானே, நீ இப்படி நாக்கிலே நரம்பு இல்லாமே பேசினா பெத்த வங்க காதுலே விழுந்திருச்சின்னா எப்படியிருக்கும்னு கண்ணாலேயே சாடறா. புத்தி,புத்தி: அதானே ராவேளை யிலே மரமேறக் கூடாதுன்னு சாத்திரமே வெச்சிருக்காங்க பசின்னா பேசாமே தெருவுல போய்ப் பிச்சை எடுத்துட லாம். பிச்சை கேக்க வெக்கமா இருக்கு? ஒரு வீட்டிலே புகுந்து திருடு.”

‘திருடத்தானே ஏறினேன்!” எங்கள் இருவர் சிரிப்பும் கலந்தது.

‘ஒஹோ, நான் இப்ப சொல்றதைத்தான் சேஞ்சியாக் கும் இடம்தான் மர்றிப்போச்சு...இதோ தோசை வத் துட்டுது’

தோசையா அது? மெத்து மெத்தெனக் குழல்விட்டுக் கொண்டு வட்டவட்ட இதழ்கள். அதற்குப் பதச் சூட்டில் குழம்பாய்ச் சட்டினி, தேங்காயில்லை. குழம்பு இல்லை. சட் டினிதான். ருசி என்பது இது தானா? சட்னியில் தோய்த் துப் பூவைவிண்டு வாயில் போடுகிறாள். ஒரு ஒரு விள்ள லுக்கும் என்வாயுடன் அவள்வாயும், அவள் அறியாது தானும் லேசாய்த் திறந்துக் குவிகிறது.

அம்மா என்பது இதுதானா?