பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு

இடை வேளை: ஆமாம், எனக்கு அப்போ இடைவேளை தேவைதான்.

சினிமாவில் இண்டர்வெல் போல் அல்ல. ‘வெற்றிலை பாக்கு பீடி சிகரெட்!” மட்டச் சரக்கை ஒண்னுக்கு நாலு: விலை கொடுத்து வாங்கி, இருட்டில் மென்றுதின்று. இரைச்சலை மகிழ்ச்சியாய் செயற்கையில் கொண்டாடு கிதார்களே, அது அன்று!

அடுத்த நிமிடம் நலுங்கி விடுமோ எனக் கலங்கும் நளினம் மிளிரும் கனவு நாட்களுமில்லை. பட்டுப்போன்ற லன்னத்துடன் அதன் உறுதியும் இழைந்த அந்நாட்களைக் கனவு நாட்கள் என்று எப்படிக் கூறுவது?

சந்தோஷ நாட்களா? அப்படித் திட்டவட்டமாக, அவுட்டு வாணக் களிப்பு நாட்களுமில்லை. என் வாழ்க் கையின் வஸந்தமா? ஊஹாம்; அதுவும் ஒத்து வரவில்லை. ஆனால் ஏதோ நீடித்த தருணத்தில் மந்த ஹாஸ் வேளை யென்று சொல்வேன்.

(அனுபவம் அன்று : பாஷை இன்று) சுபாவத்தில் நானே கொஞ்ச்ம் வார்த்தை மோகம் கொண்டவன் என்று இப்போது தெரிகிறது. போகப் போகச் சொற்சுவை காணக்கான, அதன் பித்தும் கூடியே வருகிறது, கூடவே வருகிறது.

மாடி அறையில் ரத்னக் கம்பளத்தின் மீது கோமு, சப்பனம் கொட்டி உட்கார்ந்திருக்கிறாள். அவளுக் கெதிரே நாயனமும் அதன் குப்பிமேல் உட்கார்ந்திருக் கிறது. அதற்கொரு அமுத்தல் இருக்கிறது.

“அம்பி, இதை லேசுன்னு நினைக்காதே. இதுக்கே கபடு, சூது ரொம்ப உண்டு. வித்தை தெரிஞ்சவஹ. ஏற்கெனவே வாசி த் த வாத்யமாச்சுதே! விசயம் தெரிஞ்சவங்களுக்குத்தான் படியும், தி ரு ட் டு மாடு. எல்லாருக்கும் கறக்காது. என்னென்ன தன்னுள்ளே அடக்கி வெச்சிருக்கு தெரியுமா?”