பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 )fr

‘ஏன் கோமு நீ நல்லாத்தானே வாகிக்கறே” “ஆமா, நீ தான் மெச்சிக்கனும்” “அதென்னவோ, உன் வாசிப்புக்குத்தான் நான் ஜன்னி தெளிஞ்சேன். முதன்முதலா நினைப்பிலே முளிச் சுண்டேன்.’

அவள் கண்களில் சட்டென்று ஒரு மின்னல் ஓடிற்று. “ஒ அன்னிக்கா? அ ன் னி க் கு மத்தநாட்களுக்கு ஒரு மாதிரி தான். உனக்காக விட்டுக் கொடுத்ததோ

என்னவோ ?”

இருவரும் சிரித்தோம். இல்லே அம்பி, என்னால் முடிஞ்ச அளவுக்கு இதை நான் தாஜா பண்ணுறேன். சீட்டுக்கட்டி இந்தக்கம்பளத் தைப் பிடிச்சேன். மூணாவது சீட்டே விளுந்திடுச்சி. சரி வாத்தியத்தின் ரா சி தா ன் னு நெனச்சுக்கிட்டேன். இதோ இதுலே ஒரு டாலர் தொங்குது பாத்தியா. அரைச்சவரன். அதுலே மிச்சம் பிடிச்சு, இதுலே மிச்சம் பிடிச்சு-தாலிகட்டினாத்தான் .ெ ப ம் ம ன ட் டி , வேலைக்குப் போனாத்தான் புருஷன். வேஷங்கட்டினாத் தான் வாத்தியம்-என்ன சொல்லுதே?”

சர்வ சம்மதத்தில் தலையை பலமாக ஆட்டினேன் அவள் சொல்வதெல்லாம் இல்லாதவன் தானே நான், “தாத்தா இருந்தவரை அவரிடம் கத் துக்கிட்டேன். அவர் போனப்புறம் குருவிடம் பாடம் கேக்கல்லே! பெட்டைக்கு யார் சொல்லிக் கொடுப்பா?”

தோ பார் கோமு. நீ என்னதான் தாளம் போடு. இது ஆண் பிள்ளை வாத்தியம்.குழலை நான் ஊதறப்போ கழுத்து எப்பிடி புடைக்குது பாத்தியா கழுத்து நரம் பைக் கட்டித் தேர் இளுக்கலாம், உங்களால் முடியுமா? நீ ஏன் மீசைக்கு ஆசைப்படறே ?”

(அவர் அப்படிச் சொல்லியிருந்தால், இவள் விஷயத் தில் அது சரியல்ல.