பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருணை

இந்த நாவலை உங்கள் முன் வைக்கையில் தனிப் பெருமிதம் அடைகிறேன். இதை எழுத எனக்குப் பத்து வருடங்கள் பிடித்தன. விட்டுவிட்டுத்தான் எழுதினேன், ஆனால் பத்து வருடங்கள், இதன் விண் விண் தெறிப்பைச் சுமந்திருக்கிறேன்.

எழுத்தும் ஆத்மாவின் யாத்திரைதான். ஆத்மா என்று ஒன்று இருக்கிறதா என்கிற சந்தேகமும் இந்த யாத்ரா மார்க்கத்துள் அடங்கியதுதான். இந்த யாத்ரை யில் சேருமிடம் என்று கிடையாது. அங்கங்கே தங்குமிடங் கள், தங்கியே போய்விடும் இடம் தவிர.

ஆகவே இந்த சிருஷ்டி, பத்து வருஷங்களின் நீளோட் டிய உழைப்பு மட்டுமன்று இதில் இதுவரை என் வாழ்வின் சத்தே தோய்ந்திருக்கிறது.

எந்த எழுத்துமே, சிறுகதையோ, நெடுங்கதையோ’ நாவலோ, கட்டுரையோ, கவிதையோ அப்படித்தான் அந்த சமயம்வரை, எழுதியவனின் வளர்ச்சியை, முதிர்ச்சியைப் பிரதிபலிக்கத்தான் செய்யும். ஆனால் நாவல் என்று வருகையில், அதன் திரைச்சிலை பெரிது. அதனாலேயே இந்த ப்ரயாணத்தின் பாதையும் பெரி தல்லவா? நாவல் என் முழங்கைகள் இடிபடாமல், கால் களைத் தாராளமாக வீசி நடக்க, ஆங்காங்கே என் உள் வானத்தின் வண்ணங்களை, அங்கே இறங்கி விட்ட உயிரின் கோலங்களைத் தங்கித் தயங்கிச்சிந்திக்க,சுவைக்க, பாட, ஒட, ஒளிக்க ஒளிய, எண்ணத்தின் இதழ்களைப் படிப்படியாகப் பிரிக்க - நாவல் விசாலம்தான்.