பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு i

அம்பி எனக்கு ஒரு ஆசை. ரீதி கெளளையில் “ஜனனி நினுவினா வாசிச்சுக்கிட்டே அ ப் படி யே உசிர் பொட்டு’னு போயிடனும் கொடுப்பனை வேணும் :

-இதுதான் ஸ்ரீராகம். நாணிக் கோணி, தளுக்கி மினுக்கி இடுப்பிலே குடத்தோடு.

உடம்பை ஒடிச்சு ஒடிச்சு ஸ்திரீயின் முழு லசுணத் துடன் சொகுலா) நடை போட்டுக்கிட்டு வருதுபார். ‘நாமகுலாம ஐயோ !” உடம்பை சிலிர்த்துக் கொண் டாள். நான் பொம்புளை தான். ஆனால் எனக்கு இப்ப இந்தப் பொம்புளை மேலே ஆசை பீறிடுது!”

இவள் இப்படி என்னிடம் லஜ்ஜை கெட்டுப் பேசு கிறாளே என்று தோன்றவில்லை,

இவள் ஏது சொன்னாலும் பாந்தமாயிருக்கிறது.

இவள் பேசும் விஷயத்தின் உக்கிரம்.

ஜன்னலுக்கு வெளியில் ஒரு வெண்மேகம் இவள் பேசுவதை ஒட்டுக் கேட்டுத் தங்கி, பின் நகர்கின்றது, மரங்கள் இலைகளில் அசைவற்று நிற்கின்றன.

நேரத்தையே நிறுத்தி விடுவமோ ?

கோமு நீ என் குரு.

கற்கண்டில் குழைத்து ஊட்டுகிறாய்.

உன்னிடம் கற்றுக் கொண்டது. இதுதான்.

ராகங்கள், ராகலக்ஷணங்கள் மட்டுமல்ல.ஸங்கீதத்தின் சாக்கில் ஏதோ ஒரு மண்டலத்தின் வாசலைத் திறந்து விட்டாய். பூமிக்கும் ஆகாயத்துக்கும் நீ கட்டிவிட்ட சூத்திரக்கயிறில் ஏறி சொர்க்கத்துள் எட்டிப்பார்க்கிறேன். ஸங்கீதம், கலை, வெளந்தர்யம். ஏதேதோ அலைகள், ஆனந்தங்கள்- இவைகளோடு இழைவுகள்--பேரெல்லாம் அப்போத்தெரியாது. அப்போ புரிந்தது சொர்க்கம் ஒன்று தான.