பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 ga)fr. s

சொர்க்கம் என்பது இதுதானா ?

3 O

தென்னந்தோப்பில், கவலையேற்றத்தின் அருகே, கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்திருக்கிறேன். கட்டிலடியில் முத்தையா, குந்திட்ட வண்ணம் இளநீரைச் சீவிக் கொண்டிருக்கிறான்.

இது மூணாவது இளநி. முகத்திலும் மாரிலும் வழிய இரண்டு இள நி- இரண்டு சொம்பு குடித்தாகி விட்டது. வயிறு வெடித்து விடும்போல் திணர்றது.

‘முத்தய்யா போதும் ஆளை விடும் இனிமே முடியல்லே.”

எனக்கு உயிர் கொடுத்தவனை இப்படிப் பேசறேனா, இது நியாயமாவுமா? ஆனால் முத்தையாலே சொல்லி யாச்சு. இத பார் அம்பி, இந்த வாங்கோ போங்கோ எல்லாம் எனக்கு வேணாம். அந்த நாளிலிருந்தே எனக்குப் பழக்கமில்லே அதுக்கு நான் பொறந்தவனுமில்லே. வாய் நிறைஞ்சு பேரைச் சொல்லி அழை. எனக்கு அதுவே சரி. அதுதான் சரி. அப்பத்தான் எனக்கே பதில் குரல் கொடுக்கத் தோணும். இல் லியோ யாரையோ சொல்றாங்கன்னு என் ஜோலியைப் பார்த்திட்டு இருப்பேன், காது கேளாமல்.’

‘முடியாதா? ஏன் முடியாது? ரெண்டு தரம் சிறுநீர் கழிச்சா ஒடிப் போவுது அத்தினியும். நீ இப்போ இளநி நிறைய குடிக்கணும். அது தேளா? நெருப்பா? ஒருநாள் விட்டு ஒருநாள் எண்ணெய் தேச்சுத் தலை முழுவணும். ஸ்நானம் பண்ணிறியா இல்லியா? நான் வேலை மேலே போயிடறேன். செந்தாமரை கவனிக்குதா இல்வியா? அவளைச் சொல்லிக் குத்தமில்லே, பசங்களோடே போராடவே சரியாயிருக்குது. எப்பவும் மாரிலே ஒண்ணு, இடுப்புலே ஒண்னு தொங்குது. அவளாலே மரத்துக்கு மரம் தாவ முடியுமா? ஹா. ஹ் ஹா. ஹா!”