பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு

காற்றுக்குச் சலங்கை கட்டினாற்போல் அவனுக்குப் பின்னரும் சிரிப்பு ஒலித்துக் கொண்டிருக்கிறது.

அறுந்த மணிச்சரம்.

{} 

ஆஸ்பத்திரி.

வெள்ளைப்பீங்கன் சதுரங்கள் பதித்த சுவர்கள்.

விசாலமான அறையில் ஒரே ஒரு கட்டில்.

Nபn. விழிகளில் மருந்தைக் கட்டி, இமைகளை மெத்தென மூடுகிறாள்.

“a go-piease, don’t “ .

ஆஸ்பத்திரியுமல்ல. நன்னுமல்ல. கண்ணுக்கு மருந்து மல்ல. அத்தனையும் ஆசை.

தென்னஞ்சோலையில் கயிற்றுக் கட்டிலில் படுத்தபடி. கண்ணின் உள் குளுகுளுவில் தோன்றும் தென்றலின் ஆவி சொரூபம். போனவாரம் நான் இருந்த நிலவரமென்ன ? இப்போ நான் கானும் சொகுசு என்ன ? சோத்துக்கு லாட்டரி அடிச்சவனுக்கு வேளா வேளைக்குத் தீனி, திணிப்பு, உபசரணை, சங்கீதம் வானத்தில் நீந்தும் சம்பாஷணை, தென்னந்தோப்பில் கயிற்றுக்கட்டில்கைகட்டிச் சேவகம்.

சொர்க்கம் என்பது இது தானா?

இது கனவு இல்லை. தெரிகிறது. ஆனால் இத்தனை யும் கனவுக்குத்தான் பாந்தமான அம்சங்கள். ஆனா? இவை நனவாயிருப்பின் பொருந்தவில்லை. இதில் நீதிகூட இல்லை என்று தோன்றுகிறது.

இப்படியே நீளோட்டி நடக்குமா?

நடக்கலாமா?

flo! No!! No!!;