பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கீகரிக்கப்பட்ட முறையில் நான் எழுத்தாளன் இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. என்னிடம் எண்ணத்தின் மூட்டமும், சிந்தனையின் மந்தாரமும் ஆ மான இருள்களும்தான் கதை அம்சத்தைக் காட்டிலும் அதிகம். என் எண்ணத்தின் நிர்வாணத்தை அவசிய இடங் களில் மூடவோ அல்ல நுட்பங்கள் பிதுங்கவோ தான் எனக்குக் கதை பயன்படுகிறது.

கவிதை என்பது வெறும் வார்த்தை ஜாலமட்டுமன்று. உணர்ச்சியின் எதுக்களிப்பு அன்று. பிறவிபோல், விதி போல் நேர்வது. மழையும் பிறப்பும் மகாதேவனுக்கும் தெரியாது’. கவிதையை மூன்றாவதாகச் சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் மொழி-வசனமோ, கவிதையோஅதுவே அதன் வெளிப்பாட்டைக் கவனித்துக்கொள்ளும். அந்த மாதிரி சமயங்கள் இந்த நாவலில் அடிக்கடி நேர்ந் திருக்கின்றன. அடிக்கடி இதில் கட்டங்கள் தம்மைத் தாமே எழுதிக் கொண்டிருக்கின்றன. .

சில நாட்களாக ஒரு இளைஞன் என்னுடன் பேச வருகிறார். தனக்கென்று தனி அபிப்பிராயம் கொண்ட வர்தான். மிகமிக. ஆனாலும் பல சமயங்களில் எங்கள் ஸ்ருதிகள் இணைகின்றன. சில சமயங்களில், த்வனிகள் கூட ஒன்று பேசுகின்றன.

GL GG au n st Ggm sin surrt fi : Joy and Sorrow are nothing but extended distortions of Compassion (சந்தோஷமும் துயரமும் கருணையின் வக்ர நீட்டல் களன்றி வேறு அல்ல) உங்கள் நாவல் புத்ர"வைக் காட்டிலும், இதில் அந்த compassion நிறைய தெரி கிறது, (ஆம், இதன் படிவ நிலையில் அவருக்குப் படிக்கக் கொடுத்தேன்)

அவர் கூற்றின் அடிப்படை - அடிப்படைத் தன்மை யில் எல்லோரும் நல்லவரே என்பதுதானோ?

இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். இதுவே அதிகம் இதற்குமேல் மார்தட்டல் ஆகிவிடுமோ என்கிற பயம்