பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு {

மனங்கள் ஒன்றோடொன்று கலந்து தனியாயும் நின்று, விதவித உணர்வுகளில் உள்ளத்தில் வெள்ளம் பெருக்கெடுக்கின்றது.

விழி திறவாதே! விசுவ கர்ப்பத்தில் நீ ஒரு சிசு. உனக்கு முலை தர, அந்தந்த சமயத்தின் தாய் வந்து போகிறாள். தோள் தர உனக்கு எத்தனை உடன் பிறந் தோர்கள்!

தென்னங்குலைகள் அண்ணன்மார்களின் புஜங்கள், மார், புஜப் புடைப்புக்கள்

கூந்தல்களை அள்ளிச் செருகிய கொண்டை முடிச் சுக்கள்.

மனைவிகள், காதலிகள், அக்கா, தங்கை, பாட்டி, பெண்ணின் உறவுகள்.

எத்தனை எத்தனை அத்தனையும் பரத்துக்குப் பரஸ்பரத்தின் அர்ச்சனை.

அதையே எடுத்து அதுக்கே அர்ச்சனை.

கம்பங்களில் மின்சாரக் கம்பிகள் அதிர்த்து பாடு

கின்றன விங்ங -sing sing!’

தென்னை மட்டைகளில் சலசலப்பு. கட்டில் கால்களைச்சுற்றி, அணில்கள், ஒடிப்பிடித்து விளையாடுகின் ஐன.

எங்கோ வயலில் பம்புசெட் ஓடுகிறது. ஜக் ஜக் ஜக் ஜக்... குழாயில் தண்ணிரின் படபடப்பு. யாரோ அங்கு துணிதுவைக்கிறார்கள்.

நான் கண் திறக்கவில்லை. ஆனால் என்மேல் வெண் மேகங்களின் வெளிச்சம் தவழ்கின்றது.