பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு ;5

மறதியின் வெற்றியே வாழ்க்கையின் நியதி.

புல் திட்டுமேல் இலையைப் போட்டுப் பரிமாறு கிறாள்.

முருங்கைக்காய்த் தானையும் முழுக் கத்தரிக்கா யையும் மேலே தங்கவிட்டு, புழுங்கலரிசியின் புலுபுலுவுள் காரக்குழம்பு இறங்குகிறது. காரத்தின் ஜெவஜெவ. உருளைக்கிழங்குப் பொரியலில் அங்கங்கே வெங்காயமும் பூண்டும் முழிமுழி முழிக்கின்றது. கிழங்குத் துண்டு ஒன்று ஒன்றும் வாய்கொள்ளா அவ்வளவு பெரிது.

இவர்கள் வீட்டுச் சமையலே காரம்தான், கண் தளும்பும் காரம், வாய்க்கு உணக்கை. வயிற்றுக்கு ஆகணும். எப்பவும் ஒரு ஐட்டம்தான். அதுவும் குழம்பு.

ரஸம் இவர்களுக்குச் செய்ய வரவில்லை.

எனக்காக மோர். ஒரு கொட்டாங்கச்சி.

தயிர் என்கிறாள்.

வாங்கினது பின் எப்படி இருக்கும்?

“எங்களுக்கு மோர் ஒத்துக்காது. உடனே ஜளிப்பு. மோர்ப் பேச்சை எடுத்தாலே மூக்கு ங்ெண ங்ெண, தெரியல்லே?”

எனக்குச் சாப்பாடு ஆனதும் கோமு, மூட்டையைக் கட்டிவிட்டு முன்றானையை விரித்துத் தரையில் உடம்பை நீட்டி விட்டாள். ஆள் உயரம். சித்திரை பிடிக்கல்லே ஆனால் என்ன வெய்யில்!

நிமிஷத்தில் உரத்த மூச்சு- குறட்டை அல்லதுருத்திபோல் அவளிடமிருந்து கிளம்புகிறது. வாய் லேசாய்த் திறந்து கொண்டது. அழுந்த வாரிய கூந்தலில் இரண்டொரு பிரி கலைந்து அலைகிறது. வாத்யத்தை ஊதி ஊதி தாடைகள் உரங்கண்டு பெண் ம்ருதுவை இழந்து விட்டன.

க-5