பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 @s fr

கட்டிலில் படுத்துப் பார்க்கிறேன். துளக்கம் வர வில்லை,

கூட்டைவிட்டுப் பிரிந்த அனுபவததை மீண்டும். துண்டப் பார்க்கிறேன்.

ஈதெல்லாம் வரணும் என்றால் வந்து விடுமா? உன் கைச் சொடுக்குக்குக் காத்திருக்குமா என்ன? எனக்குத் தெரியவில்லையா?

ஆனாலும் கண்ட ருசி. ஆனால் வருவதற்கு ஏதோ வழி இருக்கிறது எனக்கே தெரிகிறது. தேட வேண்டும். முறையோடு தேட வேண்டும். ஏதோ அகஸ்மாத்தில் ஒரு தருணம் உடல், மனம், ஆவி மூன்றும் லோகோஸ்ருதியுடன் இணைந்து இரண்டறக் கலந்ததன் விளைவு அனுபவம் நேர்ந்து ருசி காட்டி விட்டுப் போயும் விட்டது. அது வந்த வேலையே அதுவந்த வேளைதான். திரும்பி அதேபோல் வாவா வென்று வேளையைச் சீண்ட முடியுமோ? சீண்டக் சிண்டச் சொரசொரப்புத்தான். வழி தெரிந்து வழியோடு வழிபட்டு, வழி அடையனும் அதுவரை, அதுவரை

எழுந்து உட்காருகிறேன். கிணற்றில் ஜலம் உறங்குகிறது. ஏற்றக்காலில், ஏற்றக்கால் கட்டியபடி உறங்குகிறது.

  • , -, { :  : - வெய்யிலில் வயற் பச்சை துளிர்த்து நிற்கிறது. ஆகாய நீலம் அசைவற்று நிற்கிறது. எங்கும் உறக்கம்; நிசப்தம். அமைதி. அன்னையிடம் பால் குடிக்கையிலேயே, உறக்கம் வந்து, குழந்தை தலை ஒரு பக்கமாகச் சாய்வதுபோல் கடைவாயில் வழியும் பால் மயக்கம்.

என் மேலும் அது மயக்கம், திருட்டுத்தனமாக என்.

&

மேல் இறங்கி, மார்மேல் தவழ்ந்து முகத்துக்கு ஏறி விரிந்து