பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு 67

அதன் அடித்த பஞ்சு என் மேல் படர்ந்து என்னைத் தன்னுள் சுருட் டிக்கொள்கிறது. இது தா ன் அன்னை மயக்கமோ? அம்மா தோன்றுகிறாள்.

அம்மாவை நான் கடைசியாகப் பார்த்த நினைவில் அவள் உடுத்தியிருந்த அதே பச்சைப் புடவையில் அவளைப் பார்க்கிறேன். .

அப்பாவும் அம்மாவும் என்னைப் பிரிந்த போது: என்ன காரியமாக இருவரும் சேர்ந்துபோனார் கள்.எனக்கு இதுவரை நிச்சயமாகத் தெரியாது. எல்லாம் வயிற்றுப் பிழைப்பின் .ெ க ஈடு ைம ய ர ல் தான் இருக்கும். கவியாணமோ அ ப க ச ரி ய .ே ம என்னையும் கூட அழைத்தும் செல்லும் இடமாவோ சமயமாவோ இல்லையோ என்னவோ ? இரவே திரும்பிவரும் திட்டத் தில்தான் போயிருக்கிறார்கள் காமுப்பாட்டி சமயத் துக்கு ஒரு கதை வரலாறு, தன் செளகரியத்துக்குச் சொல் இறாள். இருவருக்கும் ஒன்றாக உயிர் பிரிந்த விவரம் இன்னும் மூடுசூளைதான். நானும் அவர்களுடன் போயி ருந்தால் எனக்குத் தெரிய வழியில்லை.என் விதியும் அவர் களுடன் சேர்ந்திருக்குமே! இதுலே என் ஆபுசுபூரா எனக்குத் திராக்கொடுமை. இத்தனை அநிச்சயமான இந்த வாழ்வு எதற்கய்யா வேண்டும்? எல்லாம் ஆட்டிவைப்ப வன் வேடிக்கைக்குத்தானே!

அம்மா என்னை விட்டுட்டு ஏன் போனே?

நான் அழவில்லை. என்சதை அழுகிறது என்னை விட்டுவிட்டுப் போனவள்மேல் என் மனம் இறுகுகிறது. இத்தனை கிட்ட நிற்கிறாள். ஆனால் எட்டித் தொட முடியவில்லையே, -

“எங்கே குழந்தை போ யி ட் டே ம்? அம்பி, போக்கிடம் சொல்லேன். உன்னையே சுத்திண்டு உன் மேலேயே கண்ணாய்த் தானிருக்கோம்.”

‘அம்மா, அப்பா எங்கே?”