பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 @fr. g grtr

“என் பக்கத்தில் தான் நிக்கறார் தெரியல்லே ? உன்னைப்பார்த்துச் சிரிக்கிறாரே, தெரியல்லே?”

தெரியல்லியே அம்மா !” ‘பரவாயில்லே. இப் போ நான் தெரிஞ்சேனா, பின்னாலே தானே தெரிவார்.’

“நீ தெய்வமான பின்னும் எனக்குச் சொல்லும் ஆறுதல் இதுதானா ?”

‘நான் தெய்வம் என்று யார் சொன்னது? கண்ணுக்கு .ெ த ரி ஞ் ச வ ைர , மனசுக்கும் புரிஞ்சவரை

இதப் தி ந ந் த வ ைர , எல்லாமே அவ்வளவு த .ே ன போகப்போக உலகம் நகர்றது. அத்தோடு நாம் நக றோம். அந்த ரீதியில் எல்லாமே போகப் போகத்தானே ! அப்பப்போ அப்பப்போ போகப் போக...

o

மந்திரம் மூச்சாய் அடங்கிப்போகிறது. என் கண்கள் மலர்கின்றன. என்னோடு எனைச் சூழ்ந்த காகஷியறும் உலகமும் மலர்கிறது.

கோமு முழங்காலைக் கட்டிக் கொண்டு உட்கார்ந் திருக்கிறாள்.

என்ன அம்பி இன்னிக்கு நீ ஒரு மாதிரியாத்தான் இருக்கே தூக்கத்திலே அளுவறே! கன்னத்தில் கண்ணிர் காஞ்சிருக்கு.”

ஏதேனும் கனவு கண்டிருப்பேன்’ கண்ணைக் கசக்கிக்கொண்டேன். கன்னங்களை இழுத்துத் தேய்த்துக் கொள்கிறேன். என்னின்று ஒரு தே ம்ப ல் எழுகிறது, குழியில் புதைத்த குழந்தை புரள்வது போல. கோமு கண்டு கொள்ளவில்லை. கோமு, நீ சமர்த்து.

வெய்யில் சாய்ந்து விட்டது.