பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு

கோமு, நீ வாத்தியத்தைக் கொண்டு வந்திருக்கலாம். இந்த சமயத்துக்குப் பைரவியோ முகாரியோ மூச்சுப் பிடிச்சு வில் வளைச்சேன்னா, இந்தப் பரந்தவெளிக்கு அப்படியே அள்ளிக்கும்.”

வெக்கக் கேடு! வீட்டுள்ளே வாசிக்கவே ஆயிரம் வில்லங்கம். இங்கே கல்லடி தான் முதல் கல்லெறி அப்பன், அடுத்தது புருசன், அப்புறம் நீ-”

“நான் என்ன சேஞ்சேன்?’’

‘உலகமே அதுதானே ப்யா காரணமே தேவை யில்லே. அவங்க எறிஞ்சாஹ என் கணக்குக்கு நானும் ஒன்னு! வீட்டிலே யாருக்கும் என்னைப் பிடிக்காது. எனக்கும் யாரையும் பிடிக்காது. அதுவும் நான் குழலைப் பிடிச்சதிலிருந்து குரோதம் முத்திப் போச்சு. ஆமா. - பெரிய வார்த்தைதான். இருந்துட்டுப் போவுது என் புருசன் என் வாசிப்புக்கு எப்படி வேவறான் தெரியு

| )( ? ‘.’

எனக்கெப்படித் தெரியும்? அந்து ஆள் கண் ணில் படுவதே துர்லபம். நானும் அவரும் இதுவரை சந்திக்கவே நேரவில்லை. மாடிச் சுவரில், காலையோ, மாலையோ சில சமயங்களில் உயரமாய், ஒரு நிழல், மீசை, சிவப்புத் தலைப்பா உள்ளடங்க, ஏறுவதோ இறங்குவதோ எனக்கென்று ஒதுக்கி வைத்திருந்த என் அறைக் கதவு திறந்திருந்தால் தென்படும். ஏட்டய்யா யாரோடும் பேசுவதாகத் தெரியவில்லை. மாடியிலிருந்து வார்த்தை விளங்காமல், சில சமயங்களில் சில உறுமல்கள் கீழே எட்டும்.

‘ஆளுக்கு ஒண்ணே ஒண்ணுதான் குறி. எப்போ சர்கிள் ஆவுது? எப்படி ஆலறது? அதுக்குக் குறுக்குவழி என்ன? இன்னொணு. ஏட்டு ஏட்டுகூட இல்லே, சாதா P,C, 433 தான். ஆனால் மனுசனின் கேணி ஆசைக்குக் கேலியா ஸ்டேஷன்லே யாரோ ஏட்டுன்னு அழைச்சுட்