பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 ffr

டாங்க, அவ்வளவுதான், ஐயா அதையும் ஏத்துக் கிட்டாரு. வெக்கம், மானம் கெட்டவன். சர்கிளுக்கும் தனக்கும் இடையே அது ஒண்னுதானே! சர்கிளுக்குப் போய்ச் சேர, யார் மூஞ்சியை மிதிச்சு ஏறலாம்? யார் முதுகைச் சொரியனும்? ஒரே வெறி. கொள்கையில்லாத மனுசன். பிடிச்சு முயலுக்கு மூணே கால். அடிச்சுக் கிட்டேன் அப்பவே. இங்கே போய் என்னைத் தள்ளாதே. இங்கே எனக்குப் பிடிப்பு ஏற்படல்லேன்னு. ஆனால் இதை யாராலே மாத்த முடியும்?’ முன் மண்டையில் சுழித்துக் கொண்டாள். ஆனால் எனக்கு எதைப் பத்தியும் அக்கறையில்லே. யாரைப் பத்தியும் அக்கறை யில்லே. அம்பீ, எனக்கு உன்னைப் பத்திக்கூட அக்கறை யில்லே-”

பேச்சு என்னவோபோல் போய்க் கொண்டிருக்கிறது. யாரிடம் எதை எதிர்பார்க்க எனக்கு உரிமை? இப்போ தேள் கடியை முன்னிட்டு எனக்கு நடந்து கொண்டிருக்கும் உபசரணையே-? ஆனால் என்றேனும் பட்டாசு வெடிக்க வேண்டியது தானே!

‘ஆனால் உன்னிடம் ஒரு சூட்சுமம் இருக்கு. சுண்ணாம்பிலே சூட்சுமம். யாரும் எது சொல்றதையும் பொறுமையா, கவனமா கேட்டுக்கறே. நாங்களும் உன் செலவில் எங்கள் மனசில் இருப்பதை அப்படியே கொட்டி டறோம்.”

நீ அப்படி நினைக்கிறாய். இதையே வேறு விதமாயும் கொள்ளலாம், எல்லாருக்கும் நான் துவைக்கிற கல். மல்லன் குத்துப் பழகும் மணல் மூட்டை. எடுப்பார் கைப் பிள்ளையென்று இப்படியே வாழ்க்கையில் என் பங்காக ஆகி விட்டது.

தோமு எங்கோ பார்த்தபடி, உரக்கச் சிந்தித்துக் கொண்டிருந்தாள்.

தேள் கொட்டின கையோடு, உன்னை மூச்சு பேச்சில் லாமே, தட்டையா வீட்டுக்குக் கொணாந்து கட்டிலில்