பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"P

அப்பா கிடத்திச்சே அப்போ எனக்கு ஒரு எண்ணம் தோணிச்சு. நீ என் வீட்டில் இருக்கற வரை உன் கண்ணில் படக்கூடாது.’

எழுந்து உட்கார்ந்தேன்.

‘நான் மாடியில் இருந்தால் நீ கீழே, நீ இங்கிருக்கும் வரை. நான் வெறும் நாயனமா மட்டும், உன் செவியில் ஒலிச்சுக்கிட்டிருக்கனும், உன் உயிர் போகும் வரை அந்த அளவுக்கு உனக்கு இந்த ஓசை நினைப்பிருந்தால் இது தவிர நாம் இருவரும் ஒருவரைப் பத்தி ஒருவர் தெரிஞ்சுக்க அ வ சி யம் இல்லை, எதுவுமில்லை. எப்படி என் யோசனை ?” என் பக்கம் திரும்பிப் புன்னகை புரிந்தாள். “ஆனால் அதுதான் நடக்கல்லியே ! உனக்கு நெனைப்பு வந்த அன்னிக்கே நான் கும்பலோடு சேர்ந்துட்டேனே : ஆனால் நான் ஆசைப்பட்டபடி இருந்திருந்தால்அதிலேயே ஒரு தவமிருப்பதாப் படல்லே? மத்தவங்களுக்கு இது சொன்னாலே புரியாது. எதிர்ப்பு, கேலி, கிண்டல் தான் மிச்சம். நம்மலங்களுக்கு ஒண்னுதான் தெரியும்” எல்லாமே கேலி,

ஆமா, வரவர எனக்கு இப்படித் தோணுது. உறவினால் என்னபயன் ஒரு ஒரு சந்திப்பிலும், ஒரு ஒரு புது முகத்திலும், உறவில் ஏதோ சிக்கல்தான் ஏற்படுது. தனிமை. யார் வழிக்கும் நான் போவல்லே, யாரும் என் வழிக்கு வரவேணாம். என் வழியில் என்னை விட்டுடுங்க. என் வழி என் பிறப்புரிமை அந்த நிலை கெட்டுப் போவுது. நான் சொல்றது யாருக்குப் புரியப் போது ? நான் குணம் கெட்டுப் போய் வழி தப்பி இருக்க வழி தேடறேன். அதுவும் நான் பொம்புள்ளை-ன்னு நினைக் கறாங்க.”

ஏன் புரியவில்லை ? என்னென்று புரியவில்லை. ஆனால் நன்றாய்ப் புரிகிறது. அப்பவே நன்றாய்ப் புரிந்தது. இப்போ என்னென்று புரிகிறது. ஒரு