பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3) @

முத்தையாவும் நானும் தென்னந்தோப்பில் மாலை வேளை உட்கார்ந்திருக்கிறோம். நான் கட்டிலில். தரை யில் அவன் தென்னை ஒலையில் தடுக்கு முடைந்து கொண்டிருக்கிறான். முத்தையாவினால் ஒரு நிமிஷம் கம்மாயிருக்க முடியாது. அவன் கரங்கள் தாம் உண்மைக் கரங்கள். உழைக்கும் கரங்கள். சொல்லாமலே செய்து காட்டும் உபதேசக் கரங்கள். செயல்தான் அவைகளின் பேச்சு, சேதி எல்லாம்.

பிந்து மாலினி, சிந்து பைரவி, வாஹதீஸ்வரி, மாளவி என்று கோமுவும் நானும் கலை, எங்கீதம் .ெ ல ள ந் த ர் ய ம் என்று நக்ஷத்ரங்களுடன் ஆயிரம் அளாவினால் ஆய்விடுமா ? தாrண்யமற்ற எடையில், அத்தனையும் சுக.ஜீவிகளின் பொழுது போக்கு வளவனாத் தானே !

இ : இந்நேரம் இங்கே நான் ஏன் இருக்கேன மதாயுமா :

‘தடுக்குமுடையதே.”

‘அது Side. மெயின் அதுவல்ல. இன்னிக்கு நம் மருமவப்பிள்ளை தனிக்குடித்தனம் போறாரு அவங்க போறப்போ நான் அங்கே இருக்க வேணாம்னு இங்கே யிருக்கேன்.” -

அப்போ நாங்கள் திரும்பிப் போறப்போ வீட்டில் கோமு இருக்க மாட்டாளா ? மார்பு லேசாக ‘பக்’

இரண்டு நாட்களாக ஏதோ மசமசப்பு உண்டு. ஏட்டு வேளையில்லாத வேளை வீட்டுக்குத் திரும்பி மாடிக்கும் கீழுக்குமா, கிடுகிடென ஏறுவதும் இறங்குவதும், அறைக் கதவுகள் அறைந்து மூடிக் கொள்வதும், கோமு முகத்தில் குங்குமச் சிவப்பும், விறைத்த மார்பு (அங்கு மார்பு என்று சொல்லிக் கொள்ள என்ன இருக்கிறது? வேறு விஷயம்) ம், நடையும் அவள் மூக்கின் பின் அவன் போவதும்குடும்பம் என்றால் இதுவும் போலும் ! எனக்கென்ன ?