பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 ga)fr rfr

உனக்கு வர சொத்தை அவனுக்குக் கொடுக்கப் போறேனா? என் விசயத்திலே கண்டிசன் போட இவன் யாரு? ஏட்டு சொல்லி உன்னை நான் வெளியே அனுப்பறதுன்னா அது எனக்கு சரிப்படல்லே. அப்பறம் முத்தையான்னு ஒருத்தன் என்னத்துக்கு முத்தையா பைத்யக்காரன். ஒப்புக்கிடறேன். ஆனால் இவங்க எல்லாம் நினைக்கிற மாதிரியில்லே. முத்தையா எல்லாம் தெரிஞ்ச பைத்தியக்காரன், தெரிஞ்சே ஏ மா ந் து போறவன், உண்மையில் ஏ மா ந் து போறவனா? என்னவோ விட்டுக் கொடுத்துட்டு மேல் காரியத்தை ஒட்டிட்டுப் போவறேன். அவங்களுக்கு அதிலேயே ஒரு சந்தோசம்னு, அதிலே எனக்கு கஷ்டமா? ஒண்ணு வெச்சுக்க அம்பி, நான் அனுபவத்துலே கண்டது. தாங்கக் கூடிய நஷ்டம் எதுவுமே நஷ்டமில்லே. அதெல்லா ஸ்வால்லே சேர்த்தி. அப்படிப் பார்க்கப் போனால் எதுவுமே நஷ்டமில்லே. ஆனால் விட்டுக் கொடுக்கறத்துலேயும் எல்லை உண்டு, துரோகம்தான் உண்மையிலே தாங்க முடியாது. முதுகிலே கத்திக் குத்துக்கு என்ன செய்ய முடியும்? உன் கையாலேயே, கத்தியை எடுக்க முடியுமா?

‘அவன் போவாட்டி நான் போவேன்’னான். ரொம்ப சரி, இன்னிக்காச்சும் தெரிஞ்சுதே உனக்கு, உனக்கு ரெக்கை முளைச்சுப் போச்சு, நீதான் பறக்காமே தரை யிலேயே சுத்திட்டிருக்கேன்னு. அதுவே சரி, குசாலாப் போய்க்கோ, என்னிக்காவது நடக்க வேண்டியது. தானே'ன்னு சொல்லிட்டேன், ஏட்டு என்ன நினைச் சாரோ, நான் மோவாய்க் கட்டையைப் பிடிச்சுக்கிட்டுக் கெஞ்சுவேன்னு பார்த்தாரோ? இப்போ அவன் சொன்ன படி நடத்திக் காட்டாட்டி, அவனுக்கு அவமானம். ஒருத்தருக்கொருத்தர் சவாலாப் போச்சு. இன்னிக்கு நாள் பார்த்திருக்கான்'